விழி வெண்படல பாதிப்புக்கு புதிய சிகிச்சை அறிமுகம்
சென்னை:' விழி வெண்படல பாதிப்புகளை, 'பின்ஹோல் பியூபிலோ பிளாஸ்டி' என்ற சிகிச்சை வாயிலாக, சரி செய்யும் நுட்பத்தை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ குழுமத்தின் தலைவர் அமர் அகர் வால் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து, அமர் அகர்வால் கூறியதாவது: விழி வெண்படலத்தில் பாதிப்பு ஏற்படும் போது, பார்வைத்திறன் பாதிக்கும். இதற்கு விழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே, இதுவரை தீர்வாக உள்ளது. அறுவை சிகிச்சையில் தொற்று அதிகரிக்கவும், உறுப்பு நிராகரிக்கப்படவும் வாய்ப்பு அதிகம். எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக, சேதமடைந்த விழிப்படலத்தின் முழு அடர்த்தியையும் சரி செய்து, விழியின் உட்புற திசுக்களை, மீண்டும் சீராக்கும் சிகிச்சையை, நாங்கள் முன்னெடுக்கிறோம். இ தற்கு, 'பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி' என்று பெயர். இந்த சிகிச்சை முறையில், விழி வெண்படலங்களில், காயம், தழும்புகள் போன்ற குறைபாடுகளால் ஏற்படும் பார்வை இழப்பை, உறுப் பு மாற்று சிகிச்சை இல்லாமல், சரி செய்ய முடியும். வி ழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, இச்சிகிச்சை முறை உள்ளது. இதனால், உறுப்பு தானத்திற்கு காத்திருக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை குறையும். இந்த சிகிச்சை, உலகமெங்கும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா, வியட்நாம், எகிப்து நாடுகளை சேர்ந்த, அறுவை சிகிச்சை நிபுணர்கள், இச்சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இந்தியாவில் இதுதொடர்பான விழிப்புணர்வு மேம்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.