உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ துறைகளில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை ஏற்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த, தமிழக அரசு, 13.93 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. சென்னையில் இருந்து மஹாராஷ்டிர மாநிலம் ஷீரடி, ஷனி ஷிங்னாபூருக்கு, வரும் 14ம் தேதி விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணத்திற்கு ஒருவருக்கு, 19,950 ரூபாய் கட்டணம். அதேபோல, சென்னையில் இருந்து உடுப்பி,- முர்டேஸ்வர் சுற்றுலாவுக்கு, டிசம்பர், 4ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நான்கு நாட்கள் பயணம்; நபருக்கு, 30,900 ரூபாய் கட்டணம். விபரங்களுக்கு,90031 40680, 90031 40682 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம் என, ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை