செய்திகள் சில வரிகளில்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., - குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு, ஜூன் 20ல் வெளியிடப்பட்டது. அதில், பணியிடங்களின் எண்ணிக்கை, 2,327 ஆக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, 213 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை, 2,540 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார். ------உலக சுற்றுலா தினத்தையொட்டி, செப்டம்பர், 27ல் தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் விருது வழங்குவது தள்ளிவைக்கப்பட்டது. அந்த விருதுகள், வரும் 18ம் தேதி வழங்கப்பட உள்ளன. பயண ஏற்பாட்டாளர், விடுதிகள், உணவகம் உள்ளிட்ட 17 பிரிவுகளில், சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு விருதுகள் தரப்படும்.