உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

தமிழக ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியுடன், மின்னணு எடை தராசை, 'யு.எஸ்.பி., போர்டல், வைபை, புளூ டூத்' போன்ற வசதிகளில் ஒன்றை பயன்படுத்தி இணைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, பொருட்களின் எடைக்கு ஏற்பவே ரசீது வழங்கப்படும். சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு, அக்., 5 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல், www.ideunom.ac.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் இளங்கோவன் வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை