உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிக்கு மாவோயிஸ்ட் செலுத்திய கல்வி கட்டணத்தை முடக்கிய என்.ஐ.ஏ.,

மாணவிக்கு மாவோயிஸ்ட் செலுத்திய கல்வி கட்டணத்தை முடக்கிய என்.ஐ.ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாவோயிஸ்ட் அமைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்டதாக, மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்தை முடக்கிய உத்தரவில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவியான பூஜாகுமாரிக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்படும் மாவோயிஸ்ட் அமைப்பு கல்விக் கட்டணம் செலுத்தியதாக தெரியவந்தது; 1.13 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்விக் கட்டணத்தை முடக்கி, தேசிய புலனாய்வு முகமை, கடந்த ஜூனில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பூஜாகுமாரி மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'கல்விக் கட்டணத்தை முடக்கி உள்ளதால், கல்லுாரி நிர்வாகம் சான்றிதழ் தர மறுக்கிறது; விசாரணைக்கு ஆஜராகும்படி என்.ஐ.ஏ., சம்மன் அனுப்பியுள்ளது' என, மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்.ஐ.ஏ., தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயன் ஆஜரானார்.இதையடுத்து, 'சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளித்து, கல்விக் கட்டண முடக்கத்தை நீக்கும்படி கோரலாம்' என, நீதிபதிகள் தெரிவித்தனர். 'நன்றாக படிக்கும் மாணவி, எதிர்காலத்தில், பயங்கரவாத அமைப்பில் சேர மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Thiyagarajan S
டிச 15, 2024 07:16

இங்கே உள்ள ஒரு மாணவிக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கல்வி கட்டணம் செலுத்துகிறது என்றால் அந்த மாணவி எப்படிப்பட்டவர் அவரது பின்புமாணவின்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.... அவர் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த குடும்பத்தவராக இருக்கலாம்... எனவே நீதிமன்றத்தின் செயல் சரியானது.


muthu
டிச 11, 2024 19:34

pl consider her as innocent and good acter and do the help. if a criminal did any help that means those who got the help too criminal is any law say like that


அப்பாவி
டிச 10, 2024 11:51

ராவணன் கூடப் பொறந்தவன் தான் விபீஷணன். அவன் கட்சி மாறலியா?


Srinivasan Krishnamoorthi
டிச 10, 2024 10:16

நக்ஸல்பாரிகள் படிக்க வைக்கும் துறை மருத்துவம் மட்டும் தான். அந்த மருத்துவர்கள் நக்ஸல்பாரீகளுடைய அடிமை. அவர்கள் இயக்கத்துக்கு மட்டும் தான் சேவை செய்வார்கள் . இவர்கள் திருமணம் செய்ய அனுமதி இல்லை


karthik
டிச 10, 2024 08:48

பல ஆண்ட்டுகளாக இப்படித்தான் நடக்கிறது அனைத்து துறையிலும் பயங்கரவாத இயக்கம் தங்களுக்கு தேவையான ஆட்களை அந்த அந்த அரசு இயந்திரத்தில் நுழைகிறது.. அரசியல் கட்சிகளும் இதை செய்கின்றன. இந்த மருத்துவ மாணவி பிற்காலத்தில் அடிபட்ட நக்சல்களுக்கு உதவும் வேலை கூட செய்வார்.


GMM
டிச 10, 2024 08:14

பயங்கர வாதிகளிடம் கல்வி நிதி பெற்று படிக்கும் மாணவி, மனம் பயங்கர வாதத்தை நியாயப்படுத்தும். சான்று முடக்க என். ஐ .ஏ உத்தரவில் நீதிமன்றம் குறுக்கிட மறுத்தது சரியே. மனு தள்ளுபடி உத்தரவு சரியே.


R.RAMACHANDRAN
டிச 10, 2024 07:51

இந்த நாட்டில் அரசின் மூன்று அங்கங்களில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை விட கொடுமையானவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் வழங்கி ஊக்குவிப்பதால் தான் மாவோயிசம் வளர்கிறது என்பதை யாரும் கருத்தில் கொண்டு செயல்படவில்லை.உரிமைகளுக்காக போராடுபவர்களை எல்லாம் குற்றவாளிகளாக சித்தரித்து தண்டனை அளிக்கின்றனர் அரசின் மூன்று அமைப்புக்களில் உள்ள குற்றவாளிகள்.இதற்காகவா இந்த நாடு சுதந்திரம் பெற்றது.


Nagarajan S
டிச 10, 2024 07:47

சரியான தீர்ப்பு. படிப்பு முடிந்த பிறகு தீவிர வாதத்தில் ஈடுபட மாட்டார் என உத்திர வாதம் அளிக்க வேண்டும்


visu
டிச 10, 2024 07:42

நல்ல தீர்ப்பு இவர் நெக்ஸாலிடுகளுக்கு மட்டும் மருத்துவம் செய்யவேண்டும் என்றால் அதர்க்கு சான்றிதழ் தேவையில்லை மக்களோடு மக்களாக கலந்து குழப்பம் விளைவிக்க சான்றிதழ் தேவை


கரிகாலன்
டிச 10, 2024 07:27

படித்து விட்டு அரசையே எதிர்ப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை