உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலாப்பட்டு சிறையில் என்.ஐ.ஏ., விசாரணை

காலாப்பட்டு சிறையில் என்.ஐ.ஏ., விசாரணை

புதுச்சேரி: காலாப்பட்டு மற்றும் ஏனாம் சிறைகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். புதுச்சேரி, வில்லியனுார், கணுவாப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமரன், 43; பா.ஜ., நிர்வாகி. இவர் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு, கடந்தாண்டு ஏப்ரல் 29ம் தேதி தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) அமைப்பிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் ரவுடி நித்தியானந்தன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்து காலாப்பட்டு மற்றும் ஏனாம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வழக்கின் சாட்சிகளை போனில் மிரட்டுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்று நேற்று காலை 8:30 மணி முதல் 3 மணி நேரம் காலாப்பட்டு மற்றும் ஏனாம் சிறைகளில் கைதிகள் போன் பயன்படுத்துகிறார்களா என அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை