உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொண்டாட்டம், குதூகலத்துடன் கட்டுப்பாடும் இருக்கணும்; வேகத்தை விடவும் விவேகம் முக்கியம் என்கிறார் விஜய்

கொண்டாட்டம், குதூகலத்துடன் கட்டுப்பாடும் இருக்கணும்; வேகத்தை விடவும் விவேகம் முக்கியம் என்கிறார் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வேகத்தை விடவும் விவேகம் முக்கியம்' என தொண்டர்களுக்கு மாநாட்டில் பங்கேற்குமாறு, தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், அக்., 27ல், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். முதல் மாநாட்டுக்கான அடிக்கல்லை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நாட்டினார். இந்நிலையில், கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து, நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=da0ch9jv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

லட்சியக் கனல்

தமிழக மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை. அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல். இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?

வெற்றிக் கொள்கை

நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா. இப்படிச் சொல்லும்போதே, ஓர் எழுச்சி உணர்வு, நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான். இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகள்

பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை.

அதீத விருப்பம்

ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும்.

பேருக்கு அரசியல் வரவில்லை

தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர். மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ. அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.

வெற்றி நிச்சயம்

இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்.இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோசத் தருணங்களை இப்போதே மனம் அளவிடத் தொடங்கிவிட்டது. வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார். மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, நடிகர் விஜய் முதல் கடிதம் வெளியிட்டதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Barakat Ali
அக் 04, 2024 16:03

பாஜக இவரை இறக்கியதா ???? அப்படிச்சொல்பவர்கள் சிந்திக்க முடியாதவர்கள் .... அப்படி பாஜக இவரை இறக்கியிருந்தால், இவர் திராவிடம் பேச மாட்டார் ..... நீட் க்கு எதிராக பேச மாட்டார் ..... புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகப்பேச மாட்டார் ..... பாலிவுட் ஷாருக் கான் ஐ விட அதிக சம்பளம் வாங்கும் கோலிவுட்டின் முக்கிய ஹீரோ .... இன்னும் சில வருடங்கள் நடித்தால் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாம் ..... சம்பாதித்ததை செலவு செய்வாரா ???? அரசியலில் தேறமாட்டோம் என்று தெரிந்தும் அரசியலில் துணிந்து இறங்க காரணம் என்ன ???? யாருடைய எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து அவர்களுக்கே உதவப்போகிறார் ???? அப்படி உதவ இவருக்கு கிடைத்த ஆதாயம் என்ன ???? இதே போன்ற ஆதாயம் ம நீ ம வுக்குக் கிடைத்திருக்குமா ????


என்றும் இந்தியன்
அக் 04, 2024 15:59

ஒருமொடாக்குடியன் குடிப்பது தவறு என்று சொல்வதும் இதுவும் ஒன்றே. த வெ க தரமில்லா வெட்டிக் கழகம் எதற்க்காக ஆரம்பித்தது என்று சொல்லமுடியுமா


Barakat Ali
அக் 04, 2024 17:57

திமுகவின் எதிர் வாக்குகளை பிரிக்க ..... மாநிலத்துக்குள் கட்சி நடத்தும் கமல்ஹாசன் மாநில அரசை எதிர்க்கவில்லை ....... அதே போலத்தான் இந்த சின்ன கமல்ஹாசனும் ....


Ms Mahadevan Mahadevan
அக் 04, 2024 15:18

இந்த மாநாட்டுக்கு ஆகும் செலவு யார் செய்கிறார்கள்? த வெ க கட்சி செய்கிறதா? அதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? கணகக்கு உண்டா? விஜய் சொந்தப் பனாமா? உள்ளதை சொல்லுவார் விஜய்? உள்ளதை உண்மையை சொன்னால் த வெ கே மாறுபட்ட கட்சி என்ற பெயர் எடுக்கலாம்


narayanansagmailcom
அக் 04, 2024 15:02

வேகம் விவேகம் இருக்கணும் பிகிலு


Madras Madra
அக் 04, 2024 13:48

பெரியாருக்கு மாலை போட்டு கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்கும் ஜோசப் விஜய் தன பெயரை கூட நேர்மையாக சொல்ல தயங்கும் இவர் என்ன கொள்கை கொண்டு இருப்பார் என்பது தெரிந்த ஒன்றே


வைகுண்டேஸ்வரன்
அக் 04, 2024 12:55

யப்பா கொஞ்சம் அடக்கி வாசியுங்க. பிஜேபி யின் அழுத்தத்தில் தான் விஜய் கட்சி ஆர்ம்பித்திருக்கிறார். பிஜேபி ஸ்பாசன்சர் பண்ணித்தான் மாநாடு நடத்தறார். ஓவர் ஆக்ட் குடுக்காதீங்க. வெயிட்.


angbu ganesh
அக் 04, 2024 12:44

கண்டிப்பா இவன் ஏற்கனவே நம்ம விநாயகருக்கு வாழ்த்து சொல்லல அதுக்கே அடி பட்டிருக்கும், இவன் தீயமுக்கவின் கையாலா இருந்த செத்தான், நல்லது செஞ்ச நாங்க ஆதரிப்போம் சும்மா மத அரசியல் நடத்தின மொவன இருக்கற இடமே தெரியாது பார்த்துக்கோ ஆமா அன்னிக்கு ஸ்கூல் எல்லாம் லீவ் விடாம போன என்னப்பா பண்ணுவ உங்க உறுப்பினர்கள் எல்லாம் ஸ்கூல் போறவங்கள்செய்


Ramesh Sargam
அக் 04, 2024 12:24

மொதல்ல பெற்ற தாய், தந்தையர்களுக்கு, கூடப்பிறந்தவர்களுக்கு, இளமையில் உதவிய நண்பர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளவேண்டும்.


Ramesh Sargam
அக் 04, 2024 12:23

சரக்கு, பிரியாணி உண்டா?


HoneyBee
அக் 04, 2024 11:55

சாயம் வெளுக்க போகுது... கதை முடிந்தது