உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ., சோதனை; தஞ்சாவூரில் இருவர் கைது

பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ., சோதனை; தஞ்சாவூரில் இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு படையினர் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் சாலிமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் ரகுமான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. அல்உம்மா என்ற பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த ரெய்டு நடக்கிறது.

தஞ்சாவூரில் 5 இடங்களில் ரெய்டு

ஹிஸ்புத் தஹிர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக கருதி தேசிய புலனாய்வு அமைப்பினர் தஞ்சாவூரில் 5 இடங்களில் ரெய்டு நடக்கிறது. குழந்தையம்மாள் நகரில் அகமது என்பவர் வீட்டில் இன்று (ஜூன் 30) காலை 6 மணியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும். சாலியமங்கலத்தில் அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மூவரது வீட்டிலும் சோதனை நடைபெற இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து இடங்களில் இன்று காலை ஆறு மணி முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இருவர் கைது

சாலிமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் ரகுமான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் மீதும் உபா சட்டத்தின் கீழ், என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anbuselvan
ஜூன் 30, 2024 14:02

சோதனை செஞ்சுண்டே இருந்தால் பத்துமா ? யாரையாவது கிடுக்கி பீதியுடன் தக்க ஆதாரங்களுடன் உள்ளே தள்ளி இருக்க வேண்டாமா? இதில் அரசியல் கலப்படம் இல்லாமல் நாட்டு மக்கள் நலன் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டும்


Duruvesan
ஜூன் 30, 2024 12:58

தீயமுகவையோ தீயமுக உபிஸ் அயோ சீண்டி பார்க்காதீங்க அப்பால விடியல் பொங்கினால் அவோலோ தான் ???


Kasimani Baskaran
ஜூன் 30, 2024 11:12

கேஸ் டேங்க் வெடிப்பு போல புதிதாக நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாநில அரசு ஓட்டுக்காக வேடிக்கை மட்டுமே பார்க்கும். ஆகவே இந்துக்கள் கவனமாக இருப்பது நல்லது.


kulandai kannan
ஜூன் 30, 2024 10:55

குனியமுத்தூரில் சோதனை போடுங்கள் ஆபிசர்.


பேசும் தமிழன்
ஜூன் 30, 2024 10:36

அத்தனை தீவிரவாதிகளும்.. தமிழ் நாட்டில் தான் அடைக்கலமாகி இருப்பாங்க போல தெரிகிறது.. அவர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது.... தமிழ்நாடு தான் நமக்கு பதுங்கி வாழ்வதற்கு சரியான இடம் என்று !!!


GoK
ஜூன் 30, 2024 09:48

நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என்று இவர்கள் கூக்குரல் இடுவதுக்கும் அந்த வினாத்தாள் ஒழுகியதுக்கும் அதில் "பிடிபட்ட ஆட்களுக்கும்" எந்த கட்சிகளுக்கும் தொடர்பு இந்த என்.ஐ.ஏ சோதனைகளில் பிடிபட்ட நபர்களை விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் . மதவாத அரசியல் கூடாது ஆனால் மதவாத கிரிமினல் நடவடிக்கைகள்?


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 09:16

எல்லா வகாபி, தவ்ஹீத், சலாஃபி இயக்கங்களையும் உலகம் முழுவதும் தடை செய்யும்வரை தீவீரவாதம் ஒழியாது.


Rajasekar Jayaraman
ஜூன் 30, 2024 08:47

நெய்வேலி 30வது வட்டத்தில் சோதனை போடுங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை