உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிக்கு என்.ஐ.ஏ., சம்மன்

எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிக்கு என்.ஐ.ஏ., சம்மன்

சென்னை:பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக புகாரில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 'சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' என்ற, எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவருக்கு தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில், இரு தினங்களுக்கு முன், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் இம்தாத்துல்லாவை கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின்படி, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில், வரும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகி ஷேக் அப்துல்லா, 45, மற்றும் எலக்ட்ரீஷியன் முகமது யாசின், 35, ஆகியோருக்கு, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை