உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேயிலைக்கு ஆதார விலை கோரி நீலகிரி விவசாயிகள் மனு

தேயிலைக்கு ஆதார விலை கோரி நீலகிரி விவசாயிகள் மனு

சென்னை: நீலகிரியில் விளைவிக்கப்படும் தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை வழங்க கோரி, அம்மாவட்ட விவசாயிகள், டில்லியில் மத்திய அமைச்சர்கள் ஜிதின் பிரசாதா, எல்.முருகனிடம் நேற்று மனு அளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லிக்கோடு, நாக்குபெட்டா, குத்தச்செமை உட்பட ஒன்பது விவசாய சங்க நிர்வாகிகளும், சிறு, குறு தேயிலை விவசாயிகளும், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் ஏற்பாட்டில், டில்லி சென்றுள்ளனர். அவர்கள், நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா மற்றும் மத்திய அமைச்சர் முருகனிடம் நேற்று வழங்கினர். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர்கள், அதற்கு விரைவில் தீர்வு காணப்படுவதாக உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ