உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு

சென்னை : சென்னையில் நடக்க உள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.இசையமைப்பாளர் அனிருத், நாளை(ஆக., 23) சென்னை அருகே கூவத்தூரில் 'ஹுக்கும்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சியை எதிர்த்து சென்னை, உயர்நீதிமன்றத்தில் செய்யூர் தொகுதி எம்எல்ஏ., பனையூர் பாபு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். சுமார் 30 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சிக்கு வர உள்ளதாகத் தெரிகிறது. அந்த இடத்தைத் தான் ஆய்வு செய்ததாகவும், அதற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்காலிக கழிவறைகள், தண்ணீர் வசதி, மருத்துவ வசதி எதுவும் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும், விழா நடக்கும் இடத்திற்குச் செல்ல குறுகலான 30 அடி கிராமப்புற சாலை மட்டுமே உள்ளது. மொத்த கூட்டமும் அந்த வழியில் செல்ல முடியாது. மேலும், கிழக்குக் கடற்கரை சாலையை இரண்டு வழிப் பாதையிலிருந்து நான்கு வழிப் பாதையாக மாற்றும் பணிகளும் தற்போது நடந்து வருகிறது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கு இன்று(ஆக., 22) மதியம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நாளைய இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, எம்எல்ஏ பாபுவின் மனுவை நிலுவையில் வைத்துள்ளார். மேலும், எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் காவல்துறை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வழக்கை ஆக., 28க்கு தள்ளி வைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அந்தப் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திய போது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசல் என மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். வழக்கு தொடரப்பட்டு பெரும் சர்ச்சை உருவானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ManiMurugan Murugan
ஆக 23, 2025 00:12

கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் குப்பைகளை எரொக்க பல உபகரணங்கள் வந்த ப் பிறகு அவற்றை வெளியில் கொட்டுவது தவறு தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தலைவர் சொந்தங்கள களத்தில் இறங்க வேண்டுமட


Saai Sundharamurthy AVK
ஆக 22, 2025 22:24

அனிருத் இசையில் அப்படி என்ன இருக்கிறது ??? தோம் தொம் என்று பல வருடங்களாக பானையைத் தான் தட்டிக் கொண்டிருக்கிறார். காது செவுடாகி விடும். ரஜினிகாந்தின் உறவினர் என்பதால் தான் தமிழ் சினிமாவில் உலா வருகிறார்.


m.arunachalam
ஆக 22, 2025 21:04

இளைஞர்களை கெடுக்கும் ஒரு நிகழ்வுதான் இது.


m.arunachalam
ஆக 22, 2025 21:03

இந்த சினிமாகாரர்களின் தாக்கம் மக்களை மற்றும் சமூகத்தை சீரழிக்கிறது . மக்கள் உணர்ந்து தெளிதல் நலம் பயக்கும் .


Venkateswaran Rajaram
ஆக 22, 2025 17:56

இவர்கள் என்னமோ சாலைகள் ,ஓடைகள் போன்றவைகளை மக்களுக்கு எந்த அசௌகரியமும் நேரா வண்ணம் உலக தரத்தில் செய்து கொடுத்துவிடுகிறார்கள்


தியாகு
ஆக 22, 2025 15:19

அனிருத் வந்ததில் இருந்து தமிழ் சினிமா இசை மற்றும் பாடல்கள் மெல்ல சமாதியாகிட்டது. வயிறு பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் அனிருத் பாடல்களை பாடலாம். புரிந்தவன் புத்திசாலி. ஹி...ஹி...ஹி...


Padmasridharan
ஆக 22, 2025 15:19

காவல்துறை எல்லாவற்றையும் பாதுகாப்பாக நடத்தி தருவதுதானே வேலை சாமி. . எப்பொழுதும் மக்களை அதிகாரத்தால் அதட்டி மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்குவதுதான் காக்கி உடைக்கு பொருந்துமா. நீதித்துறைதான் இவர்களை நல்வழி படுத்தணும்


மூர்க்கன்
ஆக 22, 2025 15:59

என்ன எழவுயா உமது கருத்து. காவல்துறை என்ன உங்களுக்கு ஏவல் துறையா?? சட்டம் ஒழுங்கை காப்பதும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுதான் அவர்கள் வேலை. தனி நபர்கள் வருமானம் ஈட்ட சேவை செய்ய வேண்டிய அவசியமில்லை. சாலை போக்குவரத்தை முடக்கினாலோ போதுமான பாதுகாப்பின்றி நிகழ்ச்சி நடத்தினால் வரக்கூடிய பாதிப்புகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க சொல்ல வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை