உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது: சுற்றறிக்கை அனுப்ப அறநிலைய துறைக்கு உத்தரவு

கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது: சுற்றறிக்கை அனுப்ப அறநிலைய துறைக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, மாநிலம் முழுதும் உள்ள கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்' என, அறநிலைய துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை ராசப்பா தெருவில் கந்தகோட்டம் ஸ்ரீ முத்துகுமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, பெரும்பாலான சொத்துக்கள், பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டவை. பார்க் டவுன் நைனியப்பா நாயக்கன் தெரு, சவுகார்பேட்டை அன்ன பிள்ளை தெரு, பெரியமேடு கற்பூர முதலி தெரு போன்றவற்றில், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இங்குள்ள கட்டடங்களை இடித்து விட்டு, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணியை, அறநிலைய துறை துவக்கி உள்ளது. அதுவும் முத்துகுமார சாமி கோவிலின் நிதியை வைத்து, வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. கோவில் நிதியில், வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை அறிந்தும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டும் பணியை, அறநிலைய துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.கடந்த ஆகஸ்ட், 4ல், இது தொடர்பாக அளித்த மனுவுக்கு, அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை. இருப்பினும், வணிக வளாகங்கள் பணிக்கு கோவில் நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், முருகானந்தம் ஆஜராகினர். அப்போது,'கோவில் நிதியை பயன்படுத்தி வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, பல கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன' என்றனர்.தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''கட்டுமானப் பணிகள், தற்போது, 80 சதவீதம் முடிந்த நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கட்டடங்கள் வாயிலாக, மாதம், 7 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்யும் பணியை அரசு செய்துள்ளது. அறங்காவலர் பதவிக்கு மனுதாரர் விண்ணப்பம் செய்திருந்தார். அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த விபரங்களை மனுவில் மறைத்துள்ளார்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கந்தகோட்டம் ஸ்ரீ முத்துகுமாரசுவாமி கோவில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை தொடரலாம். அதேசமயம், அந்த கட்டுமானங்களை, அறநிலைய துறை சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது. இந்த மனுவுக்கு, நவ., 21ம் தேதிக்குள், தமிழக அரசு, அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்.மேலும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, தமிழகம் முழுதும் உள்ள கோவில்களுக்கு, அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். கோவில் நிதியில் வணிக ரீதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும். இதைச் செய்ய தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

'தி.மு.க., அரசுக்கான அபாய மணி'

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: 'கோவில் சொத்து கோவிலுக்கே' என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, தி.மு.க., அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இது குறித்து தமிழகம் முழுதும் உள்ள கோவில்களுக்கு, ஹிந்து சமய அறநிலைய துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அனுப்ப தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளையும், கோவில்களுக்கும், ஹிந்து சமய வளர்ச்சிக்கும் பயன்படுத்தாமல், வணிக வளாகம் கட்டும் போர்வையில், நிதியை சுரண்டிய தி.மு.க., அரசுக்கான அபாய மணியே, உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு. தீர்ப்பின் வாயிலாக, ஹிந்து சமய கோவில்களின் நிதியை காத்த, உயர் நீதிமன்றத்திற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kasimani Baskaran
அக் 24, 2025 04:12

சுற்றறிக்கை கிடைக்காத கோவில்களில் வணிக வளாகம் கட்ட எந்த தடையும் இல்லை.


சிட்டுக்குருவி
அக் 24, 2025 00:06

கோயில்களுக்கு நிறைய நிலம்சார்ந்த சொத்துக்கள் தானமாக வழங்கப்படுகின்றது .கோயில் உண்டியல் பணமும் கணிசமாக கிடைக்கின்றது .கோயிலை சுற்றியுள்ள நிலங்களை தவிர்த்து தொலைவில் உள்ள நிலங்களை தகுதியுள்ள இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வாடகை பெற்றால் அந்தப்பணத்தில் கோயில்கள் இலவச மருத்துவம்மனைகள் , குழந்தைகளுக்கான தரமான இலவச பள்ளிகள் ,உணவற்றோருக்கு உணவு வழங்கல் ,உடுக்க உடை இல்லாதோருக்கு வருடாந்திரத்தில் ஆடைகள் வழங்கல் இன்னும் பல சமூக சேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் உத்திரவுகள் பிறப்பிக்கவேண்டும் . தான நிலங்களை பயன்படுத்தாமல் விட்டுவைத்திருந்தால் சமூக விரோதிகள் தவறான சமூகவிரோத செயல்களுக்கும் ,அதிகாரம் படைத்தோர் சொந்தலாபாசெயல்களுக்காக ஆகிரமிப்புசெய்துகொள்ளவாய்ப்புள்ளது .அப்படிதான் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் இருந்துகொண்டிருக்கின்றன .பல இடங்களில் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து வீட்டு மனைப்பிரிவுகளாக்கி விற்றும் பணம் பண்ணிவிட்டார்கள் .கோயில்களெயெல்லாம் அரசால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல .அரசு சொத்துக்களும் அல்ல .ஆட்சியென்பது மதசார்பஹற்றது .அதனால் அரசு கோயில்களை நிர்வகிப்பதை தடை செய்யவேண்டும் .மாநில அளவில் ஹிந்து மத சொத்துக்களை தவிர மற்ற சொத்துக்களை அந்தந்த மத நிர்வாகங்களே நிர்வகித்துவருகின்றன ..மாநில அளவில் ஹிந்து மத நிர்வாக குழு அமைத்து எல்லா நிர்வாகங்களை அந்த குழுவே நிர்வகிக்கும் நிலைமையை ஏற்படுத்தவேண்டும் .அரசு அறநிலைய துறைக்கு ஒரு மந்திரி ஏற்படுத்துவதற்கு பதில் லஞ்சம் ஒழிப்புத்துறையாக மாற்றி நாட்டில் உள்ள லஞ்சங்களை ஒழிக்க முற்படவேண்டும் .


MARUTHU PANDIAR
அக் 23, 2025 21:52

அவுங்க இன்னும் நெறைய வியாபாரம் பண்ணனும், செழிக்கணும் இல்லையா? இப்ப தான் நினைவு வருது. கொத்தவால் சாவடி வியாபாரிகள், மொத்த வியாபார, மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் கடைசி வரைக்கும் 5 ரூபாய் 10 ரூபாய் என்று வாடகையை ஆண்டுக்கணக்கில் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தேவஸ்தானத்துக்கு கொடுத்து விட்டு கொள்ளை லாபம் பார்த்தார்கள் தெரியுமான்னு சிலர் கேக்கறாங்க.


MARUTHU PANDIAR
அக் 23, 2025 21:02

அங்க ராசப்ப செட்டி தெரு, தேவராஜ முதலி தெரு, நைனியப்பன் நாயக்கன் தெரு, தம்பு செட்டி, லிங்கி செட்டி தெருக்கள்,, சற்று தள்ளி ஸ்டிங்கர் தெரு மண்ணடி, என்.எஸ்.சி.போஸ் ரோடு இங்கெல்லாம் எந்த வியாபாரிகள் கை ஓங்கியிருக்கு தெரியுமா? ஆமாம். ஆமாம். அவுங்களுக்காக... அவுங்களுக்கே தான் இந்த ""பொது மக்கள் பயன் பாட்டுக்கு"" போர்வையில் வணிக வளாகம் அப்படீன்னு மக்கள் பொங்குறாங்க.


Modisha
அக் 23, 2025 21:40

யோகி ஆதித்ய நாத் சொன்னது போல தைரியமா சொல்லுங்க , ஹிந்துக்களுக்கு புரியட்டும்.


V Ramanathan
அக் 23, 2025 20:58

சென்னை புரசைவாக்கம் டாணா தெருவிலுள்ள ஆதி விநாயகர் பிள்ளையார் கோயிலில் உள்ள 6 அடி பிரகாரத்தை இடித்து கடை கட்டியுள்ளார்கள். இது எந்த கணக்கில் சேரும் என்று தெரியவில்லை


manu david
அக் 23, 2025 20:22

தமிழ்நாடு அறங்காவல்துறை பழநியில் கோவில் சுற்றியுள்ள கடைகளை எல்லாம் முஸ்லீம் ஆட்களுக்கு மட்டும் தான் கொடுத்தார்கள். முஸ்லீம் ஆட்கள் எல்லாம் பொம்மை கடை வைத்து நல்ல லாபம் பார்த்தார்கள். ஹிந்து மற்றும் கிறிஸ்தவ ஆட்களுக்கு குடுக்க முடியாது சொன்னார்கள். ஹிந்து அறங்காவல் துறை சப்போர்ட் முஸ்லீம் மக்களுக்கு மட்டும் தான். என் இப்படி செய்யுறாங்க தெரியல ? சர்ச் கட்டிடம் கடைகளுக்கு 98% கிறிஸ்தவ ஆட்களுக்கு மட்டும் தான் கொடுப்பார்கள். 2% மட்டும் தான் இதர மத தோழர்களுக்கு கொடுப்பார்கள். அறநிலைதுறை ஒரு பக்கம் தான் நிற்கும் துறையா ?


T.sthivinayagam
அக் 23, 2025 19:50

வடமாநில கோவிலில்களில் வணிக வளாகங்கள் பல உள்ளனவே. மக்கள் குழம்பு கின்றனர் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.


Shekar
அக் 23, 2025 20:08

உடனே வந்திருவானுக அங்க இருக்கு இங்க இருக்குன்னு, எங்கேன்னு கேட்டா அதோ அங்கதான் அப்படின்னு சொல்லுவானுகளே தவிர கடைசி வரை எங்கேன்னு சொல்லமாட்டானுக


vivek
அக் 24, 2025 06:29

வட மாநிலங்களில் அறிவாளிகள் இருப்பது போல சிவநாயகம் இருப்பதில்லையே என்று மக்கள் எண்ணுகின்றனர்


GMM
அக் 23, 2025 19:37

கோயில் நிதியில் வணிக வளாகம் கூடாது என்பது நிலையான ஆணை. Standing Order . மீண்டும் சென்னை ஐகோர்ட் விசாரிக்க, தீர்வு காண அவசியம் என்ன? பல கோயில்களில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. யாரும் தண்டிக்க படுவது இல்லை என்றால், ஆட்சியை டிஸ்மிஸ் செய்து கட்சியை தடை செய்ய வேண்டாமா. அரசு வக்கீல் - 7 கோடி செலவு . மாதம் 7 லட்சம் வருமானம் . மனுவிற்கும், பதிலுக்கும் ஏதாவது தொடர்பு? அரசு வக்கீல் பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டாமா. நீதிமன்ற அவமதிப்பு தாங்கும் சக்தி திராவிடர்களுக்கு உண்டு. ? அனைத்து ஜாதி அர்ச்சகர். அனைத்து ஜாதி துப்புரவு பணி செய்ய வேண்டும் என்று மசோதா போட முடியுமா? மதம் மாற்ற கோவிலை முடக்கும் பணி செய்ய தான் இந்து அறநிலைய துறை?


MARUTHU PANDIAR
அக் 23, 2025 19:31

அட்டூழியத்துக்கு ஒரு அளவே கிடையாதா? இது போல் மற்ற மத வழிபாட்டு இடங்களில் அபரிமிதமான காலி இடம் இருக்கே. கிட்டே நெருங்க முடியுமா? 7 கோடி செலவு செய்த கட்டிடத்தை இடித்தால் என்ன குடியா முழுகி விடும்,, அது தான் இவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அரசு செலவில் தொடங்கி இடத்தை சுத்தம் செய்வது வரை அரசு செலவில் முடிக்கப்பட வேண்டும் என்று கூறி மக்கள் கொதிக்கிறார்கள்.


Field Marshal
அக் 23, 2025 19:14

அறிவாலயத்தில் வணிக வளாகம் கட்ட மாட்டாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை