உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத கட்டுமான பணி நடக்கவில்லை: மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம்

சட்டவிரோத கட்டுமான பணி நடக்கவில்லை: மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சட்ட விரோதமாக நடப்பதாக தகவல் வெளியான நிலையில் சட்ட விரோத பணிகள் எதுவும் நடக்கவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்த அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி. ஜப்பான் பன்னாட்டு ஜெய்க்கா நிதி நிறுவனம் 82 சதவீத்த் தொகையாக ரூ1627.70 கோடி கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஜெய்க்கா நிறுவனத்திடமிருந்து கடன் பெற்ற நிலையில் 2023 ஆக.17ல் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. கட்டுமான ஒப்புதல் கோரி தமிழகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு 2024 பிப். 27ல் விண்ணப்பம் அனுப்பப்பட்டது.எல் அன்ட் டி நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் 2024 மார்ச் 14 ல் அந்நிறுவனம் கட்டுமான பணிகளை துவக்கியது. கட்டுமானம் தொடர்பான புகைப்படங்கள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்களைஎய்ம்ஸ் நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.இந்நிலையில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியே இன்னும் பெறவில்லை என்ற தகவல் சமூக வலைதளத்தில் வெளியானது.எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை ஏப். 27 ல் தான் தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு வழங்கியது.சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு செய்து மாநில அரசிடம் சமர்ப்பித்த பின்பே மருத்துவமனை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற முடியும். சுற்றுச்சூழல் அனுமதி பெறும் வரை அந்த வளாகத்தில் வேலி மற்றும் பாதுகாவலர் அமர்வதற்கான கூரை மட்டுமே அமைக்க முடியும். வேறு எந்த கட்டுமானப் பணிகளை எழுப்பினாலும் அது சட்டவிரோதம் என மத்திய அரசின் 2010, ஆக. 19 நாளில் வெளியிட்ட அலுவல் உத்தரவு தெரிவிக்கிறது.தற்போது மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் சட்ட விதிமீறல் என்று சமூக வலைதளத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை எக்ஸலத்தில் வெளியிட்டுள்ளது அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டுமான பணி எதுவும் நடைபெறவில்லை; கட்டுமான பணிக்கு முன்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி பெற்று பின்பே கட்டுமானம் தொடங்கப்படும் என வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Varadarajan Nagarajan
ஏப் 19, 2024 08:37

அரசு நிர்வாகம் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முறையாக செயல் பட்டால் மக்களுக்கு நல்லது நடக்கும் நிலம் கையகப்படுத்துதல் மாநில நிர்வாகங்களிடமிருந்து தேவையான அனுமதி இவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் திருச்சி விமான நிலைய விரிவாக்கமும் இதுபோன்ற காரணங்களால் காலதாமதம் ஒரு தொழிற்ச்சாலையை மூடுவதற்கும் கடற்கரையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்தால் இப்படித்தான் மக்கள் நலத்திட்டங்கள் காலதாமதம் ஆகும்


Balamurugan nithyanandam
ஏப் 19, 2024 08:02

அஸ்திவாரம் தோண்டினால் தான் கட்டுமான பணி செய்ய முடியும் அரசு அலுவல்களில் இது போன்று முன் தேதி இட்டு பல வேலைகள் நடக்கும் அது போல் தான் இதுவும் பா ஜ மேல் குற்றம் சொல்லும் தாங்கள் மாநில அரசு அனுமதி வழங்காததை பற்றி வாய் திறக்க மறுக்கிறீர்கள்


J.V. Iyer
ஏப் 19, 2024 06:14

கழக ஆட்களிடம் டெண்டர் விடாமல் இருந்தால் எப்படி இவைங்களுக்கு கமிஷன் வரும் ? அதான் இப்படி இவர்கள் எப்படி இந்த கட்டிடத்தை கட்ட விடுவார்கள் ? சின்னவரிடம்தான் ஒரு செங்கல் இருக்கே?


karupanasamy
ஏப் 19, 2024 05:32

போதை மருந்து வியாபாரி மக்களுக்கு நல்லது எதுவும் நடக்க விடமாட்டான்


தாமரை மலர்கிறது
ஏப் 18, 2024 22:27

ஸ்டாலின் அரசு சுற்றுசூழல் அறிக்கை கொடுக்காததால் ஏய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படவில்லை வேண்டுமென்றே மத்திய அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் போடுகிறார் தேவையான பணத்தை கொடுத்தபிறகும் மாநில அரசு மெத்தனமாக செயல்படுகிறது


ஆரூர் ரங்
ஏப் 18, 2024 22:19

உடனடியாக இந்த வேஸ்ட் திட்டத்தை நிறுத்துங்க. மாநகர முழுவதும் குப்பை கூளம். ஆற்றில் சாக்கடை நீர் கலப்பு. இதெல்லாம் சரி செய்யப்பட்டால் இருக்கும் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியே போதும். இல்லாவிடில் நூறு எய்ம்ஸ் கட்டினாலும் போதாது.


venugopal s
ஏப் 18, 2024 22:13

அப்போது மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டது என்று பாஜகவினர் சொன்னது பொய் தானே!


R Kay
ஏப் 19, 2024 01:11

ரூபாய்க்கு மூன்று படி அரிசி மற்றும் அணைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை, மாதாந்திர மின் கட்டணம் எல்லாம் சத்திய பிரமாணங்கள்


Kasimani Baskaran
ஏப் 18, 2024 22:12

அதாவது விடியல் அரசு இதற்கும் ஏதாவது நொண்டிச்சாக்கு சொல்லி கட்டுமானத்தை தாமதப்படுத்த திட்டமிடுவது போல தெரிகிறது சொந்த மாநில நலனில் அக்கறை காட்டாவிட்டால் கூட பரவாயில்லை வெறுப்பு காட்டுவது விடியல் அரசு மட்டுமே காவேரிப்பிரச்சினையை அவர்களின் கூட்டாளிகளிடம் பேசக்கூட முயலாதவர்களுக்கு மாநிலத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது என்று உபிஸ் தான் விளக்க வேண்டும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 19, 2024 06:21

உபிஸ்கள் போதையில் தள்ளாடிக் கொண்டு உள்ளதால் தற்போது எதுவும் கூற இயலாது இது தான் தற்போதைய வானிலை அறிக்கை


Thiruvengadam Ponnurangam
ஏப் 18, 2024 21:15

இப்ப தெளிவா புரியுது இந்த மருத்துவமனை தாமதவதற்கு என்ன, யாரு காரணம்னு மக்கள் பார்த்துட்டுதான் இருக்காங்க என்ன பண்றது, இப்ப இருக்க நிலைமைக்கு, பார்த்துட்டு மட்டும் தான் இருக்க முடியும், தேர்தல் திருவிழா காலம் இல்லையா


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ