உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் கிடையாது: கூட்டுறவு துறை

சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் கிடையாது: கூட்டுறவு துறை

சென்னை, ஜூன் 11-தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு கே.சி.சி., எனப்படும் கிஷான் கிரெடிட் கார்டு, அதாவது உழவர் கடன் அட்டை திட்டத்தில், 7 சதவீத வட்டியில் பயிர்கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை, குறித்த காலத்தில் செலுத்திவிட்டால், வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படும். சில கூட்டுறவு வங்கிகளில், 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில், கடன் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.இந்நிலையில், 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் தர அறிவுறுத்தவில்லை என, கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், கே.சி.சி., கடன் விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள், இதர வணிக வங்கிகளில், கே.சி.சி., கிஷான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் பெறவில்லை, கடன் நிலுவையில் இல்லை என்பதை, மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநர்கள் உறுதி செய்ய வேண்டும் என, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை