உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதிகளிடம் இரக்கம் காட்டக்கூடாது: அமித் ஷா

பயங்கரவாதிகளிடம் இரக்கம் காட்டக்கூடாது: அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பொருளாதார குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, சைபர் குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி அவர்களிடம் இரக்கம் காட்ட கூடாது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.வெளிநாடுகளுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது, அவர்களை நாடு கடத்தி அழைத்து வருவதில் உள்ள சவால்கள் மற்றும் உத்திகள் தொடர்பான மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=65wxs0qn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது: உலகளாவிய செயல்பாடு, ராஜதந்திரம், வலுவான ஒருங்கிணைப்பை மாநாட்டில் உறுதி செய்வோம். இந்திய எல்லைக்கு வெளியே இருந்து குற்றம், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்த பாடுபடுவோம்.பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா தனது எல்லைகளின் பாதுகாப்பை மட்டுமல்லாமல், சட்டத்தையும் வலுப்படுத்துவதில் முன்னேறி வருகிறது. பொருளாதார குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, சைபர் குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி, அவர்களிடம் இரக்கம் காட்ட தேவையில்லை.அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக தண்டனை பெற வேண்டும். ஊழல், பயங்கரவாதம் மற்றும் இந்தியாவிற்கு வெளியே இருந்து செயல்படும் ஒவ்வொருவருக்கு எதிராக நாம் பூஜ்ஜிய சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KOVAIKARAN
அக் 16, 2025 18:04

அதைப்போலவே, மக்களின் வரிப்பணத்தில் கொழித்து, லஞ்சம் வாங்கி அவர்கள் மக்களையே கொடுமைப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இரக்கம், கருணை காட்டக்கூடாது. அதற்காக ஏற்கனவே திட்டமிட்டு பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்றப்பட்ட அல்ல ஒரு புது சட்டத்துடன் வேறு சில கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.


V Venkatachalam
அக் 16, 2025 15:30

உண்மை தான் ஜி.


GMM
அக் 16, 2025 13:54

பொருளாதார, சைபர் குற்றவாளிகளிடம் மத்திய அரசு இரக்கம் காட்டாத போது நீதிமன்றம் இரக்கம் காட்டும். மத்திய விசாரணை அமைப்புகளை வக்கீல் தூண்டுதலில் நீதிபதி விசாரணை குறுக்கீடு இன்றி பார்த்து கொள்ள வேண்டும். ஆயுதம் தாங்கும் நக்சல், தீவிரவாதிகள் சரண். அல்லது ஆயுதம் மூலம் பதில். இஸ்ரேல் ஹமாஸ் போன்று என்றும் தீவிரவாதிகளிடம் பேச்சு வார்த்தை கூடாது.


சமீபத்திய செய்தி