உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆலமரம் யாராலும் வீழ்த்த முடியாது: அமைப்பு செயலர் பாரதி

தி.மு.க., ஆலமரம் யாராலும் வீழ்த்த முடியாது: அமைப்பு செயலர் பாரதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உச்சிப்புளி: ''தி.மு.க., ஒரு ஆல மரம்; அது பலமாக உள்ளதால், யாராலும் வீழ்த்த முடியாது,'' என, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு 4,034 கோடி ரூபாய் வழங்காமல் உள்ளது. அதைக் கண்டித்து, தமிழகம் முழுதும் 1,134 இடங்களில், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,வினர் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார்.பின், அவர் கூறியதாவது:வரும் 6ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. நுாறு நாள் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கி விட்டு, பிரதமர் தமிழகம் வர வேண்டும். தி.மு.க., ஒரு ஆல மரம் என்பதால், அதை யாராலும் வீழ்த்த முடியாது. புதிதாக கட்சி துவங்கும் அனைவரும், தி.மு.க.,வை தாண்டி தான் அரசியல் செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Suresh Velan
மார் 31, 2025 13:20

திமுக ஊழல் ஆலமரம் என்று தான் சொல்ல வந்தார், அவசரத்தில் ஊழல் என்ற வார்த்தையை விட்டு விட்டார். திமுக ஊழல் லட்சணம் ஊரு பூரா தெரியுது , அப்புறம் என்ன ? வந்துட்டார் பேசறதுக்கு , உள்ள களி திங்க விட்டா தெரியும் ?


Premanathan Sambandam
மார் 31, 2025 11:19

பத்து வருடம் ஆலமரம் காணாமல் போய் இருந்ததே அப்போ RS பாரதி எங்கே தங்கியிருந்தார்?


Ramona
மார் 30, 2025 11:05

ஒரு கூர்மையான அறுவாள் போதும், ஆனால் நம்ம நாட்டுல இருப்பவை கூர் இழந்த மொக்க அறுவாள்கள் அதிகமாக உள்ளன,


Esan
மார் 30, 2025 07:14

ஆலமரத்தை வீழ்த்த வேறுயாரும் தேவையில்லை. கட்சியில் உள்ளவர்களே போதும்.


Kasimani Baskaran
மார் 30, 2025 07:03

அடையாறு ஆலமரம் அழித்து போனது தெரியாது போல.


Raj
மார் 30, 2025 06:44

மாதா... மாதம் படி காசு அளந்தால் ஆலமரம்... இல்லையென்றால் புங்கமரம். ஆலமரம் நிழல் மட்டும் தான் தரும், பூ, காய், கனி ஒன்றும் தராது, ஆனால் ஒரு வண்டி முழுவதும் குப்பையை தரும்.


Balasubramanian
மார் 30, 2025 06:13

சரி! அதன் விழுதுகள் நிதி குடும்பத்தினர் அதனடியில் புல் பூண்டு கூட முளைக்க முடியாது அனைவரும் அறிந்ததே! நீங்கள் எல்லோரும் இளைப்பாறி செல்ல வந்து போகும் வழிப் போக்கர்கள் போலாம்! மக்களுக்கு ஒரு தென்னை, மா, பலா, வாழை போல் உதவிடுமா இந்த ஆலமரம்?


Sathyan
மார் 30, 2025 05:54

2026ல் திமுக அகால மரணம் அடையப்போகிறது , தமிழ்நாடு மக்கள் இந்த தீய கூட்டத்திற்கு தக்க பாடம் புகட்ட போகிறார்கள்.


PARTHASARATHI J S
மார் 30, 2025 05:46

ஆர்.எஸ்.பாரதி மிக நல்லவர். அப்பப்ப பசிவந்தால் குலைப்பார். ஆனா யாரையும் கடிக்க மாட்டார். அப்படிப்பட்டவர் கட்சி அரசியலுக்கு தேவை என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை.


நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 05:04

வந்தேறிகளை நம்பினா முதுகில் குத்துவானுங்க , க்ருஷ்ண தேவராய மன்னரின் காலத்தில் இருந்து மராத்திய மன்னர்கள் காலம் வரை நடந்துள்ளது , உங்களின் அழிவு ஏற்கனவே தொடங்கிடுச்சு , நீங்க பயந்து பயந்து கொடுக்கும் சலுகைகளும் அவர்களின் பிக்ப் வாரிய கொள்ளைகளும் இதனை தெளிவா சொல்லுது


சமீபத்திய செய்தி