உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: விவாதிக்க யாரும் தயாராக இல்லையே?

இது உங்கள் இடம்: விவாதிக்க யாரும் தயாராக இல்லையே?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கே.என்.ஸ்ரீதரன், பெங்களுரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்கள் அனைத்தும், லோக்சபா தேர்தல் தொடர்பாகவே நடைபெறுகின்றன.'கூட்டணி அமைப்பதில் ஏன் தாமதம், எந்த கூட்டணி வலுவான கூட்டணி, யார் யாருடன் சேருவர்' என்று, உத்தேச விவாதங்களாகவே நடக்கின்றன.இந்த ஊடகங்கள், தேர்தல் களத்துக்குச் சென்று, மக்களை சந்தித்து, அவர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு, உண்மைகளை வெளியில் சொல்வதில்லை. குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சாதகமாகச் செயல்படுகின்றன.பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு, தமிழகம் முழுதும் அமோக வரவேற்பு இருந்ததை, நான் தமிழகம் வந்தபோது பார்த்தேன். ஆனால், தமிழக, 'டிவி'க்கள் அதை பெரும்பாலும் இருட்டடிப்பு செய்து விட்டதாகவே தோன்றுகிறது.வட மாநில, 'டிவி'க்கள் அதை சிலாகித்துப் பேசியதையும் பார்த்தேன்.தமிழகத்தில், பிரதமர் மோடியை கிட்டத்தட்ட ஒரு வில்லன் போல சித்தரிப்பதைப் பார்த்தால், பூனை தன் கண்ணைக் கட்டியபடி, உலகமே இருண்டது என்று சொல்வதைப் போல இருக்கிறது.ஏனெனில், தமிழகத்தில் ஒரு பக்கம் மது பழக்கமும், போதை கலாசாரமும், இளைஞர் சமுதாயத்தை சீரழித்து கொண்டிருக்கின்றன; மறுபக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுபற்றியெல்லாம் யாரும் விவாதிக்கத் தயாராக இல்லையே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

NicoleThomson
மார் 20, 2024 08:22

தெளிவாக கூறியுள்ளீர்


VENKATASUBRAMANIAN
மார் 20, 2024 07:55

ஆர்எஸ்பாரதி ஊடகங்களுக்கு பாஜக அதிமுக பற்றி பேச மட்டுமே தெரியும். அதற்கு என்று பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் ஒரு கூட்டம் உள்ளது. இதுதான் தமிழக ஊடகங்கள். நெறியாளரே திமுகவுக்கு ஆதரவாகவே பேசுவார். நேர்மையான ஊடகங்கள் யாருமே இல்லை.


Ramesh
மார் 20, 2024 07:08

கல்வியின் தரத்தை குறைத்தல். மாணக்கர்களை போதையில் ஆழ்த்துவது மக்களை குடிக்கு அடிமை ஆக்குவது காட்சி ஊடகங்கள் மூலம் கலாசாரம், பண்பாடு மற்றும் குடும்ப உறவு முறைகளை சீரழித்தல் இந்து மதம் என்றாலே நமக்கு எதிராக சித்தரித்தல் தமிழ் மொழியை போற்றுவது போல் அதனை மொழி கலப்பு செய்து இளைஞர்கள் அதனை வெறுக்க செய்தல் பிற மோபி மக்களை கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் குடியேற வைத்து அவர்களுக்கு தமிழர்கள் என்னும் போலி முகமூடியை தரித்து தந்திரமாக தங்களது பலத்தை அதிகரித்தல் ஆகிய பல வகைகளில் திறம்பட செயலாற்றி தமிழகத்தை தன் காலடியில் வைத்திருப்பது தான் திராவிடியான்ஸ் சிந்தனை. உண்மையில் மக்கள் தமிழகத்தின் பெருமையையும் எதிர்காலத்தையும் கரத்தில் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து இப்போது 20 %க்கும் குறைவானவர்களே உள்ளனர். இந்நிலையில் திராவிட கட்சிகளை வெல்வது என்பது ஆண்டவனால் கூட முடியாது.


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
மார் 20, 2024 06:51

விவாதங்கள் என்ற பெயரில் வெறும் காட்டு கத்தல் தான் பெரும்பான்மையான தொலைகாட்சியில் காண்பிக்கப்படுகிறது.இதை பெரும்பான்மையான மக்கள் ரசிப்பதில்லை.மேலும் அந்த சமயத்தில் தொலைக்காட்சியை வேறு சானலுக்கு மாற்றி விடுகிறார்கள் இல்லையெனில் தொலைகாட்சியை அணைத்து விட்டு வேறு வேலையை பார்க்க சென்று விடுகின்றனர் என்ற உண்மையை இவர்கள் எப்பொழுது புரிந்து கொள்வார்கள்.ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மிக மிக குறைவாகவே உள்ளது.யாரோ ஒரு சிலரை சந்தோஷப்படுத்தவும் அவர்கள் சார்பாக ஒருதலைபட்சமாகவும் உண்மை சிறிதும் இல்லாத வகையில் நடத்தப்படும் கேலி கூத்துக்கள் விவாதம் என்ற பெயரில் அரங்கேறுகிறது.விவாதம் என்றால் என்ன தனக்கு எதிராக அமர்ந்திருப்பவரையும் பேச அனுமதித்து அவர்கள் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு தான் சொல்ல வந்ததை தங்கு தடையின்றி அமைதியான முறையில் எதிராளியையும் உறுதியாக அவர்களால் மறுத்து கூற இயலாது வகையில் விவாதிப்பது.அந்த மாதிரி எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.


RAMAKRISHNAN NATESAN
மார் 20, 2024 07:45

வேலை வெட்டி இல்லாதவர்கள் விவாதங்களை பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாத உண்மை .....


raja
மார் 20, 2024 06:22

பாருங்க இந்த தேர்தலில் தமிழர்கள் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட டிரக் மாஃபியா கும்பலை(DMK) அடித்து விரட்டுவார்கள்....


Vijay
மார் 20, 2024 06:08

திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் ஊடகங்கள்


Kasimani Baskaran
மார் 20, 2024 05:34

மூன்று விதமான நிறுவனங்கள். வாசகர்களுக்கு விசுவாசமானது முதல்த்தரம். வாசகர்களுக்கு விசுவாசமில்லாமல் யார் விளம்பரம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது - இது இரண்டாவது தரம். ஒரு கட்சி அல்லது குழுவுக்கு மட்டும் விசுவாசமான பத்திரிக்கைகள் - இவை பொதுவாக கேவலமாக பார்க்கப்படும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை