தொகுதிகள் குறித்து முன்கூட்டியே நிபந்தனை விதிக்கவில்லை!
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து வழங்க வேண்டும். வெள்ளம் பாதித்த மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணமாக போதுமானதாக இருக்காது. வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 25 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம் என கட்சியின் துணைப் பொதுச்செயலர் வன்னியரசு கூறியிருப்பது அவருடைய சொந்த, தனிப்பட்ட கருத்து. எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்து, இதுவரை நாங்கள் முன்கூட்டியே நிபந்தனை விதித்தது இல்லை. இவ்வளவு இடங்கள் கட்டாயம் வேண்டும் என நிபந்தனை ஏதும் வைக்க மாட்டோம். எங்களுடைய தகுதி, திறமை, மக்கள் செல்வாக்கு குறித்தெல்லாம் கூட்டணியில் இருப்போர் அனைவருக்கும் தெரியும். அதனால், அது குறித்து இப்போதைக்கு பேச வேண்டியதில்லை. கூட்டணியில் தொகுதி சம்பந்தமாக பேச்சு நடக்கும்போது, கட்டாயம் தொகுதிகள் எண்ணிக்கை குறித்தும் பேசி முடிவெடுப்போம். இப்போதைக்கு எந்த அவசரமும் இல்லை.திருமாவளவன், தலைவர், வி.சி.க.,