உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வட கிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் : வானிலை மையம் கணிப்பு

வட கிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் : வானிலை மையம் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' வடகிழக்கு பருவமழை அக்., 15, 16 ல் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு இயல்பை விட அதிகம் பெய்யக்கூடும், '' என வானிலை மையம் கூறியுள்ளது.சென்னையில் நிருபர்களை சந்தித்த தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் அளித்த பேட்டி: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இன்று காலை தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தொடர்ந்து அந்த பகுதியில் நீடிக்கிறது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலில் நிலை கொள்ளும். அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நேற்று வலுப்பெற்று ஓமன் கடற்கரை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால், 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும்.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை,

டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.நாளை (அக்.,15) டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும்.ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

16ம் தேதி

வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, பெரம்பலூர், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

17 ம் தேதி

வட மேற்கு மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

குமரி கடல், தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடல், தெற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று முதல் 18 ம் தேதி வரை செல்ல வேண்டாம்.

வட கிழக்கு பருவமழை

அக்.,15, 16 தேதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும். இந்த மழையால், கேரளா, தமிழகம், தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா, தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகள் அதிக பலன் பெறக்கூடியது. பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மழை குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் இட அமைப்பை பொறுத்து பாதிப்பு ஏற்படும். பருவமழை என்பது இயற்கை நிகழ்வு. அதற்காக பயப்பட வேண்டாம். மழை காலத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டுமோ அந்த இயற்கையை நாம் எதிர்பார்க்கலாம். இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
அக் 15, 2024 20:22

மழையை கணக்கிடும் அளவுகோலை மாற்றும் நேரம் வந்துவிட்டதா வானிலை நிலையமே ? முன்பெல்லாம் ஒரு கிராமத்தில் மழை பெய்தால் முழு கிராமத்திலும் பெய்யும் , இப்போ கிராமத்திலும் திராவிட மாடலில் பெய்கிறதே


Kumar Kumzi
அக் 14, 2024 23:03

விடியாத விடியலின் கோபாலபுரம் கஜானா நிரம்பி வழியும் சின்னவருக்கு டபுள் ஹாப்பி ஒவாவுக்கு ஓட்டு போடுற கொத்தடிமை கூமுட்டைங்கள் ஹாப்பி


Ramesh Sargam
அக் 14, 2024 20:51

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அரசுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மக்களே, பத்திரமாக வீட்டிலேயே தங்கவும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பல துறை அமைச்சர்கள் நீங்கள் வெளியே வந்து பாதிக்கப்படப்போகும் இடங்களில் தங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றவேண்டும். நீங்களும் வீட்டிலேயே தங்கிவிடவேண்டாம். எப்பொழுதும் செய்வது போல் இந்தமுறையும், எல்லாம் வீபரீதங்களும் ஏட்பட்டபின், வெளியில் வந்து ஒரு போட்டோ சூட் நடத்தி, நிவாரணம் அறிவிக்க முயலாதீர்கள்.


sundarsvpr
அக் 14, 2024 18:53

பெய்யும் மழையை பூமி உள்வாங்கும் என்பார்கள். இதனால் வீதியில் தண்ணீர் தேங்காது. அப்படியும் தேங்கும் என்றால் அந்த நீர் ஓடையில் சேரும்படி வாய்க்கால் வசதி இருக்கும் வீட்டிற்க்குள் தண்ணீர் வருவது குறையும், . கிணறு குட்டையில் நிரம்பும் சிமெண்ட் உபயோகம் குறைதல் அவசியமா என்பதனை யோசித்தால் நல்லது. அனுபவம் ஒரு படிப்பினை. இதனை வைத்து மழையை சமாளிப்பது எளிது.


முக்கிய வீடியோ