வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வானிலை அறிக்கைதான் பெரிய முரண். இவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை, சொல்லாதபோது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்தது. சென்னையில் சராசரியை விட 60% குறைவு .
சென்னை: தமிழகத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 398.3 மிமீ மழை பெய்ய வேண்டும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 11 (இன்று) வரை 420.9 மிமீ மழை பெய்துள்ளது. 6 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது.சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 2% குறைவாக பெய்துள்ளது.சென்னையில் இயல்பான நிலையில் 731.9 மிமீ மழை பெய்யும் நிலையில், இன்று வரை 715.1 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது.மதுரையில் இயல்பான மழை அளவு 337.7மிமீ , பதிவான மழை 350.5மிமீ 4 சதவீதம் அதிகம்.கோவையில் இயல்பான மழை அளவு 315.1மிமீ , பதிவான மழை 280.4மிமீ, 11 சதவீதம் குறைவு.
வானிலை அறிக்கைதான் பெரிய முரண். இவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை, சொல்லாதபோது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்தது. சென்னையில் சராசரியை விட 60% குறைவு .