உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனது போன் ஒட்டுக் கேட்பு: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

எனது போன் ஒட்டுக் கேட்பு: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''தமிழகத்திற்கு 'ரோடு ஷோ' என்பது புதிது. பா.ஜ.,வினர் நடத்துவது 'ரோடு ஷோ' அல்ல; மக்கள் தரிசன யாத்திரை'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவர் அண்ணாமலை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுகிறார். நான் பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டியளிப்பதில்லை. திமுக.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் தான் போட்டி. அதனால்தான் பிரதமர் மோடி திமுக.,வை மட்டும் குற்றம் சாட்டுகிறார்.

காசு கொடுத்து வரும் கூட்டம்

இ.பி.எஸ் 'ரோடு ஷோ' நடத்தினால் எவ்வளவு பேர் வருகிறார்கள் என பார்ப்போம். அவர்கள் வீதியில் வந்தால் யாரும் பார்ப்பதில்லை. தமிழக தலைவர்கள் பேசும் கூட்டங்களில் எல்லாம் மக்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு 500 பேருக்கு ஒரு சூப்பர்வைசரை வைத்து கண்காணித்து கூட்டம் சேர்க்கின்றனர். அந்த கட்சி தலைவர் பேசி முடிக்கும் வரை அங்கே உட்கார்ந்தால் தான் ரூ.250 பணம் கொடுப்பார்கள்.

மக்கள் தரிசன யாத்திரை

பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தினால் ஒருபோதும் மக்கள் வரமாட்டார்கள். ஆனால் பா.ஜ., தலைவர்கள் வீதிக்கு வந்து மக்களை பார்க்கின்றனர்; சாதாரண மக்களும் மோடியை பார்க்க வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இது 'ரோடு ஷோ' இல்லை; மக்கள் தரிசன யாத்திரை. மக்களை தரிசிப்பதற்காகவே பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் தமிழகம் வருகின்றனர்.ஒரு பிரதமர் இப்படி மக்கள் அருகில் வந்து பார்க்கிறார் என்றால் மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பை காட்டுகிறது. மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் ரோடு ஷாே செல்ல தயாரா ? பா.ஜ., பற்றி தவறான பிம்பத்தை 60 ஆண்டுகளாக திமுக கட்டமைத்துள்ளது. 'ஜி' என்று சொன்னால் கெட்டவர்கள் என்பது போல் உருவாக்குகிறார்கள். 2024 தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் இது போன்ற தவறான கட்டமைப்பு சுக்குநூறாக உடைந்துபோகும்.

கோவை மக்கள்

ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி கொங்கு மண்டலம் யாருடையது என்பதை பார்த்து விடுவோம். பண அரசியல் என்ற பேயை கோவை தொகுதி மக்கள் விரட்டுவார்கள்; தமிழகத்திற்கே கோவை மக்கள் வழிகாட்டுவார்கள். வேப்பிலையோடு காத்திருக்கும் கோவை தொகுதி மக்கள் ஜூன் 4ம் தேதி பண அரசியல் பேயை ஓட்டிவிடுவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் வரத்தான் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

செல்போன் ஒட்டுக்கேட்பு

அண்ணாமலை மேலும் கூறியதாவது: கோவையில் என்னை கண்காணிக்க சிறப்பு குழு உளவுத்துறை அமைத்திருக்கிறது. தமிழக உளவுத்துறை போலீசார் எனது செல்போனை ஒட்டு கேட்கின்றனர். என் மனைவி, என் சகோதரி, என் நண்பர்கள் செல்போனை ஒட்டு கேட்கின்றனர். அதனை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிடம் தகவல் சொல்கிறார் ஐ.ஜி. பின்னர் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு உளவுத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.தெலுங்கானாவில் செல்போனை ஒட்டுக்கேட்ட உளவுத்துறையினர் சிறையில் உள்ளனர். அங்கு உளவுத்துறை ஐ.ஜி.,யாக இருந்தவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சிறை செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ganesun Iyer
ஏப் 12, 2024 05:54

அதெல்லாம் தெரியாது ஆகஒன்றிய அரசு ஒழிக எடப்பாடி பதவி விலகு


M Ramachandran
ஏப் 11, 2024 18:08

அண்ணாமலை ஜிங்ஜா போலீசின் வயிற்றில் புளியை கரைக்கிறீர்கள்


M Ramachandran
ஏப் 11, 2024 18:04

அந்த வேலயையாவது ஒழுங்காக செய்கிறார்களா


venugopal s
ஏப் 11, 2024 17:54

பணக்காரன் பின்னாலும் பத்து பேர் பைத்தியக்காரன் பின்னாலும் பத்து பேர் போவார்கள்! இதில் அண்ணாமலை எந்த ரகம் என்று நான் சொல்ல மாட்டேன்!


Easwar Kamal
ஏப் 11, 2024 17:27

நீங்க செஞ்ச தப்பு இல்லை அதையே எதிர் கட்சி பெரிய தப்பு


கனோஜ் ஆங்ரே
ஏப் 11, 2024 17:18

பாலியல் புகாரில், பாஜ,வின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்


தமிழ்வேள்
ஏப் 11, 2024 15:42

திருந்த மாட்டார்கள்


YESPEE
ஏப் 11, 2024 15:15

ஒன்றிய அரசு ஒட்டு கேக்கும்போது இது அண்ணாமலைக்கு தெரியவில்லையா ?இப்போது ஏன் கூவுகிறார்


Rpalnivelu
ஏப் 11, 2024 15:45

ஏய் உடன்பருப்பு அது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இது திருட்டு குடும்ப குடும்பத்து ஊழல் சம்பந்தப்பட்டது


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 11, 2024 14:29

உளவுத்துறை ஒட்டு கேட்பது என்பது சாதாரணமான ஒன்று ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஒரு தலைவரை பிடிக்க இது ஒரு உத்தி அண்ணாமலை அவர்கள் உளவுத்துறையை தடம்மாற்ற எதேனும் ஒரு இல்லாத தகவலை மொபைலில் பேசி உளவுத்துறையை மடைமாற்றினால் நன்றாக இருக்கும் பாம்பின் கால் பாம்பறியும்


தமிழ்நாட்டுபற்றாளன்
ஏப் 11, 2024 14:07

எல்லாம் எழுதிக் கொடுத்தவர்களின் அறிவு - அரசியலை அறிவார்ந்த வகையில் விமர்சிப்பதை விடுத்து தெருச்சண்டையாக்கி விட்டார்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி