உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த கட்சிக்கும் எதிரானது அல்ல

எந்த கட்சிக்கும் எதிரானது அல்ல

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமஸ்தானத்திற்கு சொந்தமான திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் கோவில், தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் சிவன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களின் நிலங்கள், இடங்கள், கடைகளை பலர் ஆக்கிரமித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களின் நிலங்களையும் மீட்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கோவில்கள் கட்டப்படவில்லை. ஆனால், பிற மத வழிபாட்டு தலங்கள் உருவாகி வருகின்றன. மத மாற்றத்தால் குடும்பங்கள் சிதைகின்றன; குலதெய்வ வழிபாடுகள் இல்லாமல் போகின்றன. திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே ஹிந்துகளுக்கு சொந்தம். நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாடு, எந்த கட்சிக்கும் எதிரானது அல்ல.- அர்ஜுன் சம்பத்,நிறுவன தலைவர், ஹிந்து மக்கள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை