உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் பிரச்னையை பேசக்கூடாது என்பது சர்வாதிகாரம்: பழனிசாமி

மக்கள் பிரச்னையை பேசக்கூடாது என்பது சர்வாதிகாரம்: பழனிசாமி

''சட்டசபையில் முதல்வரின் மகன் பேசுவதால், மக்கள் பிரச்னை எதையும் பேசக்கூடாது என்கின்றனர். இது சர்வாதிகாரம்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபை வளாகத்தில் அவர் அளித்த பேட்டி:

பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், நாட்டு மக்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு வர, சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம்; நாட்டில் நடந்துள்ள பிரச்னைகளை பேச முற்பட்டோம். அனுமதி மறுத்து எங்களை வெளியேற்றி விட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில், போலீசாக பணிபுரிந்தவர் முத்துகுமார். இவரும், இவரது நண்பர் ராஜாராமனும், கஞ்சா வியாபாரிகளால் வெட்டப்பட்டுள்ளனர். இதில் முத்துகுமார் இறந்தார். ராஜாராமன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகம் முழுதும் கஞ்சா, போதைப்பொருள் விற்போர் சுதந்திரமாக விற்பனை செய்கின்றனர். இத்தகவலை போலீசாரிடம் தெரிவிப்போர் மீது தாக்குதல் நடத்திய நிலையில், போலீசாரை கொலை செய்யும் அளவுக்கு, போதைப்பொருள் வியாபாரிகள் துணிவு பெற்றுள்ளனர்.கடந்த 25ம் தேதி, சிவகங்கையில் பயிற்சி மருத்துவரை, மர்ம நபர்கள் கடத்த முயன்றுள்ளனர். இதை கண்டித்து, பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து பேச அனுமதி கேட்டேன். எங்களை திட்டமிட்டு சபாநாயகர் வெளியேற்றினார். மக்களை பற்றி கவலைப்படாத அரசாக உள்ளது. முதல்வரின் மகன் பேசுவதால், எந்த பிரச்னையும் பேசக்கூடாது என்கின்றனர்; இது சர்வாதிகாரம்.மக்களுக்காகத்தான் சட்டசபை என்பதை முதல்வரும், சபாநாயகரும் உணர வேண்டும். ஸ்டாலின் வீட்டு மக்கள் அதிகாரத்தில் இருப்பதால், எவ்வளவு முக்கிய பிரச்னையாக இருந்தாலும், சட்டசபையில் பேசக்கூடாது என்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., அரசு செயலற்றதாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக, பொய்யான பிம்பத்தை உருவாக்கி, முதல்வர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உதயநிதிக்கு காய்ச்சல்

பழனிசாமி கிண்டல்சட்டசபையில் நேற்று முன்தினம், துணை முதல்வர் உதயநிதி வசமுள்ள துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. எனினும், உடல் நலக் குறைவு காரணமாக, அவர் சட்டசபைக்கு வரவில்லை. இது குறித்து பழனிசாமியிடம், 'உள்துறை அமைச்சரை நீங்கள் சந்தித்தது குறித்து, சட்டசபையில் முதல்வர் பேசியுள்ளாரே...' என கேட்டதற்கு, ''அதனால் தான் ஒருவர் காய்ச்சல் வந்து படுத்து விட்டார்,'' என, துணை முதல்வர் உதயநிதியை கிண்டலடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Venkateswaran Rajaram
மார் 29, 2025 06:30

டாஸ்மாக் ல குடிச்சிட்டு அடிபட்டு செத்த அந்த போலீஸ் என்ன தியாகி அட எல்லா லஞ்ச ஊழலில் மிதப்பவர்கள்.. பெரும்பாலான காவலர்கள் ரவுடிகளை பாதுகாப்பதில் அவருடைய அடையாளங்களாகத்தான் இருக்கிறார்கள் மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெற்றுக் கொண்டு இவர்கள் என்ன மக்களுக்காக என்ன புடுங்குகிறார்கள் காவல் நிலையத்துக்கு சென்றால் மனிதனாக கூட மதிப்பதில்லை ஆனால் ரவுடிகள் சென்றால் இவர்கள் நின்று கொண்டு அவர்களை உட்கார வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்... ரவுடிகள் என்று சொல்வது இந்த கேவலமான இரண்டு திருட்டு திராவிட கொள்ளையர்கள் போர்வையில் இருக்கும் அரசியல்வாதிகள் தான்


Venkateswaran Rajaram
மார் 29, 2025 06:24

ஏன்டா நாதாரிகளா ரெண்டு பேரும் டாஸ்மாக்கில் குடிச்சிட்டு செத்தா அது மக்கள் பிரச்சனையா ரெண்டு திராவிட கொள்ளையர்களும் சம்பாதிப்பது அந்த டாஸ்மாக்கில் தான் யார் கொள்ளை அடிப்பது என்பதில் போட்டி....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை