உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு ஓட்டு இல்லை என்பது நன்றி கெட்ட செயல் ஜவாஹிருல்லா காட்டம்

தி.மு.க.,வுக்கு ஓட்டு இல்லை என்பது நன்றி கெட்ட செயல் ஜவாஹிருல்லா காட்டம்

தஞ்சாவூர: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: இஸ்லாமியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லை. உதாரணமாக, லோக்சபாவில் 543 எம்.பி.,க்களில், 80 இஸ்லாமியர்கள் எம்.பி.,யாக இருக்க வேண்டும்; ஆனால், 24 பேர் தான் உள்ளனர். அரசியல் ரீதியில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதால், சமூக பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட நிலைகளில் இஸ்லாமியர்கள் பின்தங்கி உள்ளதாக ராஜேந்திர சச்சார் அறிக்கை கூறுகிறது.எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப இஸ்லாமியர்களுக்கு லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தி.மு.க., மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொகுதி மறுவரையறையில், இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய தொகுதிகள் எல்லாம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது தி.மு.க., தான். முன்னாள் முதல்வர் கருணாநிதி 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்தார். அதற்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கிடையில், இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அதை செய்யாத தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என கூறுவது நன்றி கெட்ட செயல். லாக் அப் மரணம் என கூறுவதைவிட, காவல் படுகொலை என சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில், சட்ட விரோத விசாரணைக்கு உத்தரவிட்ட அந்த அதிகாரி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும். தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால், அதில் நியாயம் இருக்காதோ என்ற அச்சத்தில் தான், சி.பி.ஐ., விசாரணைக்கு விட்டுள்ளார் தமிழக முதல்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pv, முத்தூர்
ஜூலை 04, 2025 19:47

பன்றி 15 குட்டி பேடும் என்பதற்காக, காட்டிற்கு ராஜாவாக்கிவிடமுடியுமா? தகுதி அடிப்படை என்றில்லாமல், மதஅடிபடை என்பது ஏற்புடையதல்ல.


ஆரூர் ரங்
ஜூலை 04, 2025 16:12

25 வருஷமா ஜாமீனில் இருந்து சாதனை. உயர்நீதிமன்றம் ஓராண்டு ஜெயில் தண்டனை அளித்தும் வெளியில் சுதந்திரமாக சுற்றுகிறார். அறிக்கை ஒரு கேடா? எக்ஸ்ட்ராவா சீட் வேணும்னா புனித பூமி பாக்கிக்கு போ.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 04, 2025 13:00

ஜவாஹிருல்லா அருமையாக உருட்டுகிறார் .. விடுங்கள் உருட்டுவரை உருட்டட்டும்


veeramani
ஜூலை 04, 2025 09:14

இவர் இந்திய ஒற்றுமையை குலைப்பது போல பேசுகிறார். ஒரு அதத்தினர் அதிகம் வசிக்கின்றனர் என்றால் தேர்தலில் தனியாக போட்டியிட்டு பலத்தை புரியவைக்கவேண்டும் ஒட்டுண்ணியாக இருந்துகொண்டு சார்பு மரத்தை இழிவு பண்ணி பேசுதல் நன்றன்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை