உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை

பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: '' பா.ஜ.,வின் புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இல்லை

கோவையில் நிருபர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. நான் யாரையும் கைகாட்டவில்லை. கூட்டணி தொடர்பாக கருத்தையும் கூற விரும்பவில்லை. கட்சி நன்றாக இருக்க வேண்டும். நல்லவர்கள், நல்ல ஆன்மா இருப்பவர்கள் கட்சி. புண்ணியவர்கள் இருக்கும் கட்சி. உயிரை கொடுத்து கட்சி வளர்த்து இருக்கிறார்கள். எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். புதிய தலைவரை தேர்வு செய்யப்படும் போது நிறைய பேசலாம். புதிய தலைவருக்கான போட்டியில் நான் போட்டியில் இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mrs9nk0i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஏகமனதாக

இங்கு தலைவர்கள் யாரும் போட்டி போடுவது கிடையாது. பா.ஜ.,வில் தலைவருக்கு போட்டி எல்லாம் கிடையாது. எல்லாரும் சேர்ந்து ஒரு தலைவரை தேர்வு செய்வோம். இங்கு போட்டி எங்கிருந்து வந்தது. அதனால் தான் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என சொல்கிறேன். மற்ற கட்சிகள் போல், 50 பேர் சென்று பதவிக்காக வேட்புமனு நடத்தி ஓட்டு போடுவது போன்று கிடையாது. அனைவரும் சேர்ந்து ஏகமனதோடு, ஒருமனதோடு தலைவரை தேர்வு செய்வோம். அதில் போட்டி எங்கிருந்து வந்தது.

செல்ல மாட்டேன்

என்னுடைய பணி எப்போதும் தொண்டனாக தொடரும். ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும். தமிழகத்தில் நல்லாட்சி கொண்டு வருவதற்கான பணி தொடரும்.ஒரு தொண்டனாக கட்சி சொல்லும் பணியை செய்வேன். இந்த மண்ணை விட்டு செல்ல மாட்டேன். டில்லி சென்றால் ஒரு நாள் இரவு தங்கிவிட்டு மறுநாள் தமிழகம் திரும்பும் ஆள் நான். இந்த மண்ணை விட்ட செல்லமாட்டேன்.

நாடகம் முடிவு

நீட் நாடகம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. ஜனாதிபதி நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டார். இந்திய மக்களுக்கு, தமிழக குழந்தைகளுக்கு நீட் நல்லது என சட்டசபையில் அளித்த தீர்மானத்தை நிராகரித்து விட்டு, முதல்வருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பிவிட்டார்.முதல்வர், நீட் நாடகம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது. அவர் புதிய நாடகத்தை துவங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அனைத்துக்கட்சி கூட்டம் என புதிய நாடகம் நடத்தவார். அனைத்து கட்சிகளை அழைப்பார். முதல்வர் உச்சநீதிமன்றத்திற்கு செல்லட்டும் என சவால்விடுகிறேன். இதற்காக தான் காத்து இருக்கிறேன். ஜனாதிபதி நிராகரிக்கவேண்டும் எந்த ஒரு வாய்ப்பும் இருக்கக்கூடாது. இருக்கும் ஒரே வாய்ப்பு உச்சநீதிமன்றம் தான். ஏனென்றால் நீட் வந்ததே உச்சநீதிமன்றத்தினால் தான். 8 ம் தேதி கூட்டத்தில் கட்சிகள், சீனா, ஜப்பான் போகலாம் என பேசுவார்கள். தைரியம் இருந்தால் சுப்ரீம் கோர்ட் போங்கள். அங்கு தள்ளுபடி ஆகி வரட்டும். குழந்தைகளுக்கு ஒரே மனநிலையோடு படிக்க ஆரம்பிப்பார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Ramesh A
ஏப் 07, 2025 11:38

சரி


Pulikesi
ஏப் 05, 2025 22:48

அண்ணாமலை நிச்சயமா தனிக்கட்சி ஆரம்பிப்பார் 2026 ஆம் தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று நினைத்தோம். அது இல்லை என்று முடிவாகிவிட்டது இனி அந்த கட்சிக்கு ஆதரவில்லை


Ashanmugam
ஏப் 05, 2025 17:25

இனி வரும் புதிய பிஜேபி தமிழக தலைவருக்கு, திரு.அண்ணாமலைலை போல் தன்னிச்சையாக அறிவு ஆற்றல் பொது அறிவு, தைரியம் துணிச்சல் நேர்மை நியாயம் தர்மம், எந்த பிரச்சனையும் எதிர்கொண்டு நோக்கும் மனதைரியம் வரவே வராது. அவருடைய சொல்லாற்றல் பேச்சு திறமை, பொது வாழ்வில் கண்ணியம் கட்டுப்பாடு தெய்வீக நம்பிக்கை ஆன்மீக நாட்டம் புதிய தலைவருக்கு வரவே வராது. இவரை போல் துணிச்சலாக முதல்வர் ஸ்டாலின் நெ.௧ குற்றவாளி சிறையில் 2026 பிறகு அடைப்பேன் மேலும் அண்ணா அறிவாலயத்தை தகர்ப்பேன் என்றும் திமுக ஊழல் மந்திரிகளை கரண்ட்டு சிறையில் அடைப்பேன் என்று பகிரங்கமாக பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த துணிச்சல் தைரியம் இனி தமிழ் நாட்டில் யாருக்கும் வரவே வராது? என திரு. அண்ணாமலை மாற்றம் தமிழகத்துக்கு மிக பேரிழப்பாகும்.


TRE
ஏப் 05, 2025 12:38

அண்ணாமலையை அமித்ஷா கிட்ட போட்டுக்கொடுத்தாதே வானதி அக்காதானமே


Nathi Magan
ஏப் 05, 2025 09:41

திருவாளர் உதயநிதிக்கு இருக்கும் அரசியல் அறிவையும் தமிழ் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைக் தேடும் ஆழ்ந்த அறிவையும் சொல்ல நினைத்ததை தெளிவாக சொல்லும் திறமையையும் பட்டியல் இட முடியுமா நண்பரே.


Ragupathi
ஏப் 04, 2025 23:39

அண்ணாமலை போன்ற ஒரு அப்பழுக்கில்லாத மனிதர் இக்கால சாக்கடை அரசியலில் காலந்தள்ளுவது கடினமே. ஆனால் வருங்காலத்தில் இந்த குவாட்டருக்கும் காசுக்கும் மயங்காத ஒரு தலைமுறை வரும்போது நிச்சயம் இவரை போன்ற படித்த நிறைய தலைவர்கள் வருவார்கள். அதற்கான விதையை திரு அண்ணாமலை விதைத்துவிட்டார்.


தாமரை மலர்கிறது
ஏப் 04, 2025 23:28

சுமந்த் சி ராமன் போன்ற நடுநிலைவாதிகளை தலைவராக போடவேண்டும். ஜெயிக்கும் குறிக்கோளின்றி இருக்கும் சீமான் போன்ற தலைவரை தவிர்ப்பது பிஜேபி கட்சிக்கு நல்லது. அரசியலில் கட்சி ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் தொண்டர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். வெறுமனே கட்சியை வளர்க்கிறேன் என்று தோற்றுகொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் கட்சி வளராமல் காணாமல் போய்விடும். சீமானுக்கு அந்த கதிதான் ஏற்பட போகிறது.


Pandianpillai Pandi
ஏப் 04, 2025 22:03

யார் நாடக கம்பெனி வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்று இன்னும் கொஞ்ச நாளில் மக்களுக்கு தெரியதான் போகிறது. இந்தியா கூட்டணி சார்பில் சொல்லப்பட்டதுதான் நீட் விலக்கு. உங்களுக்கு திராணி இல்லைன்னா ஒதுங்கிக்கோங்க. இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அதிகாரத்த ஒரு வாரத்திற்கு கொடுத்து பாருங்கள் நீட்டே இல்லாமல் செய்து விடுவார் எங்கள் முதல்வர். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் சென்று வாதாடி பெற்று தந்தவர் தான் எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர். ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை செய்ய தீர்மானம் கொண்டு வந்து கட்டுக்குள் கொண்டுவந்தவர். மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களை காலம் தாழ்த்தி நீர்த்துபோக செய்ய ஆளுனர் மாளிகை காரணமாக இருப்பதை நீதிமன்றமே குட்டு வைத்திருக்கிறது. அந்த வரிசையில் தான் நீட் விலக்கு தீர்மானத்தை நிராகரித்ததும் . இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் தி மு க செயல்படுகிறது. 54 கடிதங்கள் எழுதியிருக்கிறார். பிரச்சனைகளை சரி செய்ய ஆராயாமல் கச்ச தீவு தி மு க வினால் தான் கைவிட்டு போனது என்று தி மு க வை காரணம் காட்டுவது ஏற்புடையதா? இதை மக்கள் நம்புவார்களா? இனி நீங்கள் எத்தனை மேடையில் ஏறி தி மு க விற்கு எதிராக நாடகங்களை அரங்கேற்றினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள் . உங்களை ஜோக்கராக தான் பார்ப்பார்கள்.


Nathi Magan
ஏப் 05, 2025 09:45

ஐயா பாசமுள்ள பாண்டியர் உங்கள் இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தான் நீட் ஐ கொண்டு வந்ததாவது தங்களுக்கு தெரியமா?


vbs manian
ஏப் 04, 2025 21:25

நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும்.


vbs manian
ஏப் 04, 2025 21:22

இழப்பு பா.ஜ., வுக்கே. ஏற்றி விட்ட ஏணியை உதைத்து தள்ளுகின்றனர். கழகம் தீபாவளி கொண்டாடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை