உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை: கவர்னர்

சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை: கவர்னர்

சென்னை:''பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.சுப்பு சுந்தரம் எழுதிய, 'காசி கும்பாபிஷேகம்' நுால் வெளியிட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி நுாலை வெளியிட்டு பேசியதாவது:ஆயிரம் ஆண்டுகளாக, பாரத நாடு ஆன்மிக தலமாக இருந்து வருகிறது.கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு, முஸ்லீம் படையெடுப்பாளர்களால் காசிக்கு அச்சுறுத்தல்இருந்தது. ஆன்மிகப் பணிகளில் நகரத்தார் சமூகம்முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் பல ஆன்மிக தலங்களில், அவர்களின் சேவை இன்றளவும் தொடர்கிறது.பொருளாதாரத்தை வளர்ப்பதில், நாட்டில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. தார்மீக வழியில் பொருளாதாரம் வந்ததாக இருக்க வேண்டும்.சுய நலத்திற்காக மட்டுமே பொருளாதாரம் என, இருந்து விடக் கூடாது. பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை. சுதந்திரத்துக்கு பின்பு தான் நாம் குடும்பமாக இருக்கிறோம். பாரத ராஷ்ட்ரா என்பது தார்மீக கொள்கைகளால் ஆனது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை