மேலும் செய்திகள்
பக்தர்களின் எடை பார்த்து டோலி கட்டணம்
07-Dec-2024
சென்னை:ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்த, கட்டுமான திட்டங்களுக்கான கால வரம்பை நீட்டிப்பதற்கு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 5,381 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவு கட்டுமான திட்டங்களை, இந்த ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். தற்போதைய நிலவரப்படி, குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்யும்போது, 10.7 சதுர அடிக்கு, 25 ரூபாய், வணிக திட்டங்களுக்கு 10.7 சதுர அடிக்கு, 60 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திட்டங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அதற்கான கால வரம்பை தெரிவிக்க வேண்டும். இதில் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடிப்பதாக தெரிவிப்பது வழக்கம். இந்த காலத்தில் பணிகள் முடியாத நிலையில், அது குறித்து உரிய ஆவண ஆதாரங்களுடன் தெரிவித்து, கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வரை அவகாசம் பெறலாம். காலவரம்பை புதுப்பிக்க, கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து, ரியல் எஸ்டேட் ஆணையம்வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்த கட்டுமான திட்டங்களின் கால வரம்பை புதுப்பிக்க, கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதல் ஓராண்டுக்கு, அத்திட்டத்தை பதிவு செய்யும்போது செலுத்திய கட்டணத்தில், 10 சதவீதத்தை செலுத்த வேண்டும். இதன்பின், மீண்டும் ஓராண்டு அவகாசம் தேவைப்பட்டால், அதற்கு பதிவு கட்டணத்தில், 20 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இதற்கு அடுத்தபடியாக, ஆறு மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்படும். இதற்கு பதிவு கட்டணத்தில், 20 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
07-Dec-2024