உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குணா பட பாடலை பயன்படுத்தியதற்காக ‛மஞ்சுமல் பாய்ஸ் பட நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

குணா பட பாடலை பயன்படுத்தியதற்காக ‛மஞ்சுமல் பாய்ஸ் பட நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

சென்னை: அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதற்காக மஞ்சுமல் பாய்ஸ் பட நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்ப பட்டு உள்ளது. இளையராஜா சார்பில் அவரது வக்கீல் சரவணன் அனுப்பி உள்ள நோட்டீசில் தெரிவித்து இருப்பதாவது: மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலை முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தவேண்டும். அல்லது அந்த படத்தில் இருந்து அந்த பாடலை நீக்கவேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரியஇழப்பீட்டையும் வழங்க வேண்டும். இழப்பீட்டை வழங்காவிட்டால் பதிப்புரிமையை வேண்டும் என்றே மீறியதாக கருதி உரிமையியல் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ஆரூர் ரங்
மே 23, 2024 10:58

இப்படம் உட்பட எல்லா ராயல்டி காப்புரிமை வருமானங்களையும் இசைக்கலைஞர் சங்கத்துக்கு நன்கொடையாக. அளித்து விட்டார். குணா படத்தில் மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யபட்ட இசையை அனுமதியின்றி வேறு படத்தில் பயன்படுத்தியது காப்புரிமை திருட்டுதான்.


M Ganesan.
மே 23, 2024 08:33

சிந்திக்காமல் தவறான கருத்தை தெரிவித்தால் எப்படி நண்பர்களே உருவாக்கியவரிடம் கூறாமலோ அல்லது அனுமதி பெறாமலோ அவர் உருவாக்கியதை இவர்கள் பயன்படுத்தி அதன் மூலமாக நிறைய சம்பாதிக்கலாம் ஆனால் அதை தன் திறமையால் உருவாக்கியவர் அதைப்பற்றி கேட்ககூடாதா? அப்படி கேட்டால் உருவாக்கியவரைப் பற்றி என்ன வேணாலும் கருத்து தெரிவிப்பீர்களா இது எந்தவிதத்தில் நியாயம்


sakthivel NSkV N
மே 23, 2024 07:51

எல்லா பாடலும் இளையராஜாவோடுது என்றால் பின் பாடல் எடுத்தியர்வர் மற்றும் பிரோடுசேர் லாம் தலைகனம் பிடித்த மனிதன் அடுத்தவரை வளர விடாத சின்ன புட்டி உள்ளவர் உள்ளவ


M Ganesan.
மே 23, 2024 09:31

முதல்ல பிழை இல்லாமல் எழுதுங்க அப்பறம் அடுத்தவங்களை குறை சொல்வீர்கள் ஒரு கடையில் ஒரு ரூபாய் மிட்டாய் உங்களால் இலவசமாக வாங்க முடியுமா?


venugopal s
மே 23, 2024 07:19

இனிமேல் பாத் ரூமில் குளிக்கும் போது பாடும் வழக்கம் உள்ளவர்கள் கூட கவனமாக இருக்க வேண்டும். சத்தம் போட்டு பாடினால் வெளியே வரும்போது இளையராஜா கோர்ட் சம்மனோடு நிற்க வாய்ப்பு உள்ளது.


M Ganesan.
மே 23, 2024 13:29

பாத்ரூம்ல பாடுவிங்களோ இல்லை அலுவலகத்தில பாடுவீங்களோ எங்கே வேணாலும் அவருடைய பாட்டை பாடி சந்தோசமா இருங்க எங்கிட்டே கேட்காம திருட்டுத்தனமா திருடி உபயோக படுத்தாதீங்கன்னுதான் அவர் கூறுகிறார்


Balasubramanian
மே 23, 2024 05:13

படம் Flop ஆகி இருந்தால்?


M Ganesan.
மே 23, 2024 09:39

பிளாப் ஆனாலும் ஆகலைனாலும் அடுத்தவங்க படைப்பை திருடறது தப்புதானே நண்பா


pv,முத்தூர்
மே 23, 2024 03:56

இவருடைய பாட்டைகேட்டாலோ பணம் கேப்பார்போல?


M Ganesan.
மே 23, 2024 12:04

ஒரு கடையில் ஒரு ரூபாய் மிட்டாய் உங்களால் இலவசமாக வாங்க முடியுமா?


RAJ
மே 23, 2024 00:35

சிறுபிள்ளைத்தனமாக நடப்ப்ச்து அசிங்கம்


M Ganesan.
மே 23, 2024 12:55

கிரியேட்டரை கேட்காமல் அவர் படைப்பை பிக்பாக்கெட் அடிப்பது அதாவது திருடி பயன்படுத்துவது பெரிய மனுசத்தனம் மற்றும் அசிங்கமில்லாத செயலா நண்பா


Santi
மே 22, 2024 23:46

வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியது


இவன்
மே 23, 2024 05:05

கொத்தடிமைஸ் க்கு copyrights பத்தி தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இல்ல, நம்ப விண்டோஸ் இருந்து ஆட்டோகேட் வரைக்கும் திருட்டு தானே ??


M Ganesan.
மே 23, 2024 12:31

இந்த சுப்பிரமணியபுரம், விக்ரம், மஞ்சுமல் பாய்ஸ், கூலி - இந்த வேதாளங்களை பற்றிதானே சொல்கிறீர்கள், ஆமாம் தலைவா எவ்வளவு சொன்னாலும இதனுடைய இயக்குனர் என்ற வேதாளங்கள் முருங்கை மரம் மட்டுமல்ல எந்த மரமாகயிருந்தாலும் ஏறி திருடி தின்னுகிட்டேதான் இருக்கும் எவ்வளவு சொன்னாலும் திருந்தாதுங்க நீங்க கஷ்டப்பட்டு உழைச்சு வச்சிருக்க பணம்ங்ற முருங்கை மரத்தில இந்த திருட்டு வேதாளங்கள் மாதிரி ஏதாவது ஒண்ணு ஏறாம பத்திரமா பார்த்துங்க சாமி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை