உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபரிமலை மண்டல பூஜை 60 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

சபரிமலை மண்டல பூஜை 60 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

சென்னை:சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜையை ஒட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:வரும் 15ம் தேதி முதல், ஜனவரி, 16 வரை, சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்தும், திருச்சி, மதுரை, கடலுார் மற்றும் புதுச்சேரியில் இருந்தும், கேரள மாநிலம் பம்பைக்கு, அதிநவீன சொகுசு, 'ஏசி' மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில், பஸ் வசதி செய்து தரப்படும். சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, டிச., 27 முதல் 30 மாலை 5:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால், டிச., 26 முதல் 29ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது. எனவே பக்தர்கள், www.tnstc.inஎன்ற இணையதளம் மற்றும் 'டிஎன்எஸ்டி' செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 94450 14452, 94450 14424, 94450 14463 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை