உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி, தாம்பரம் - மானாமதுரை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வே அறிவிப்பு:  தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 5:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நாளை அதிகாலை 3:45 மணிக்கு, மானாமதுரை செல்லும். அங்கிருந்து நாளை காலை, 11:45க்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11:10 மணிக்கு தாம்பரம் வரும் தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 3:45க்கு புறப்படும், 'ஏசி' சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4:40 மணிக்கு நாகர்கோவில் செல்லும். அங்கிருந்து, நாளை காலை 8:45 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9:55 மணிக்கு தாம்பரம் வரும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது கோவையில் இருந்து, இன்று மற்றும் நவ., 6ம் தேதி, காலை 9:35க்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதே நாளில் பகல் 1:10 மணிக்கு திண்டுக்கல் செல்லும். அங்கிருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை, 5:50 மணிக்கு கோவை செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி