உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழுதி வைக்காமல் 10 நிமிடம் பேசணும்; முதல்வருக்கு சீமான் சவால்

எழுதி வைக்காமல் 10 நிமிடம் பேசணும்; முதல்வருக்கு சீமான் சவால்

கோவை: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரையும், ஈ.வெ.ரா., பற்றி எழுதி வைத்து படிக்காமல் பேசச் சொல்லுங்கள் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோவையில் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது; தி.மு.க.,வில் இணையும் முன்னரே 3000 பேர் சேருகிறார்கள் என்று எப்படி சொல்கிறார்கள். தி.மு.க.,வையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்க வேண்டியது. நாங்கள் இன்னமும் பேசவே ஆரம்பிக்க வில்லை. தி.க.,வில் இருந்து தி.மு.க., பிறந்ததற்கு காரணம் என்ன? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6dhf0gcg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரபாகரனை நான் 8 நிமிடம் சந்தித்தேன், 10 நிமிடம் சந்தித்தேன் என்று ஒவ்வொருவர் கூறுகின்றனர். இன்னும் சிலர் சந்திக்கவே இல்லை என்கின்றனர். நான் சந்தித்து உண்மையா? படம் பொய் என்பது உண்மையா? எதை நம்புகிறீர்கள். இப்போது, நான் சொல்றேன், பிரபாகரனை சந்திக்கவில்லை. எதை நீங்கள் நம்புகிறீர்கள்? திராவிடத்தின் குறியீடு ஈ.வெ.ரா. தமிழ் தேசியத்தின் குறியீடு பிரபாகரன். இவை இரண்டும் தான் மோதவேண்டும். மூன்றரை ஆண்டுகளில் 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசிய குறிப்பு இருக்கிறது. அதற்கு எல்லாம் அனுமதி கொடுத்த நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்) அண்ணா பல்கலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக எங்களுக்கு போராட அனுமதி மறுத்தது ஏன்? தி.மு.க.,வில் சேர்ந்த யாராவது ஒருவரை ஈ.வெ.ரா.வை பற்றி பேசச் சொல்லுங்கள். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரையும், ஈ.வெ.ரா., பற்றி எழுதி வைத்து படிக்காமல் பொது தளத்தில் பேசச் சொல்லுங்கள். இந்த தலைவர்களுக்கு துணிவு இருக்கிறதா? பொது தளத்தில் பிரபாகரனை பற்றி பேசி நான் ஓட்டு கேட்கிறேன். நீங்கள் ஈ.வெ.ரா.,வை பற்றி பேசி ஓட்டுக் கேளுங்கள், யார் பெரிய ஆள் என்று தெரிந்துவிடும். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழ் சமூகத்துக்கு விடிவு.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

Rajesh
ஜன 31, 2025 19:42

செபாஸ்டியன் சைமன் பேச்சுத்திறமை இருந்தால் அதிபர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார் ..... அப்படியென்றால் பட்டிமன்ற பேச்சாளர்கள் அல்லவா முதல்வர், அதிபர் ஆகியிருப்பார்கள் .....


AMLA ASOKAN
ஜன 25, 2025 21:08

தேர்தலின் மூலம் ஆட்சி அமைப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் . தேர்தலில் தோல்வி அடைந்தால் மக்களால் புறக்கனிக்கபட்ட அரசியல் கட்சிகள் என்று பொருள் . ஆற்றல் , திறமையை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள் . மக்களை மடையர்கள் என எண்ணுபவர்களின் விமர்சனங்கள் துக்கத்தின், ஆத்திரத்தின் புலம்பல்கள். ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்கள் .


AMLA ASOKAN
ஜன 25, 2025 10:54

பேச்சாற்றல் என்பது வேறு, ஆட்சி திறமை என்பது வேறு . சீமானிடம் தமிழ் நாட்டை ஒப்படைத்தால் தனித் தமிழ் நாடாக 10 த்தே நிமிடத்தில் மாற்றி விடுவார் . துண்டு சீட்டை பார்த்து படித்தால் என்ன ? வான்வெளியை பார்த்து படித்தால் என்ன ? மக்கள் தான் தங்களது ஆட்சியாளர்களை தேர்வு செய்கிறார்கள் . அவர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல .


தீதும் நன்றும் பிறர் தர வாரா
ஜன 25, 2025 13:47

ஆட்சி திறமையும் இல்லை, பேச்சு ஆற்றலும் இல்லை.. மக்கள் விலை போய் ரொம்ப நாள் agirathu..


Barakat Ali
ஜன 25, 2025 14:19

பேச்சாற்றல் என்பது வேறு, ஆட்சி திறமை என்பது வேறு . ???? திமுகவிடம் ஆட்சித் திறமை இருக்கிறதா ???? திரும்பிய பக்கமெல்லாம் அவலம் ..... சந்தி சிரிக்கிறது ....


Ramesh Sargam
ஜன 24, 2025 20:20

அல்லது எழுதி கொடுப்பதை திக்காமல், தினறாமல், தவறில்லாமல் படிக்கவேண்டும். சவால்.


Gnanaraj A
ஜன 24, 2025 19:12

உம்மை போல புருடா விட 10 நிமிடம் என்ன 10 மணி நேரம் கூட பத்தாது


பாலா
ஜன 24, 2025 18:05

திருட்டுத் திராவிடியன் சங்கிலி பருப்பு, தாலி அரிப்பு, பூனை மேல் மதில், பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருளும் இப்படி தமிலு பேசினால் யாருக்குப் புரியும்


Indhuindian
ஜன 24, 2025 17:47

இந்த மாதிரி எடக்கு மடக்கு சவால் விடக்கூடாது


Barakat Ali
ஜன 24, 2025 17:35

எந்த பாயிண்ட்டில் அடித்தால் வீங்குமோ அந்த பாயிண்ட்டில் ஆமை அடிச்சிருச்சு ........


MUTHU
ஜன 27, 2025 18:13

உண்மையே. ஆமையால் தமிழ்நாட்டில் நடந்த ஒரு நல்ல விஷயம் இதுதான். இதிலே தவக்கா கட்சி வேறு ஈவேரா படத்தை போட்டு காமெடி ஆரம்பித்துள்ளது. இங்கே ஆமை ஆப்பையே பிடிங்கி விட்டுடுச்சி. இனி யார் பெரியார் படத்தை போட்டாலும் பார்ப்போரிடம் ஒரே கலகலப்பு தான்.


vivek
ஜன 24, 2025 17:18

ஹை.. நம்ம மணிப்பூர் பேமஸ் மரியோ...


என்றும் இந்தியன்
ஜன 24, 2025 17:14

துண்டுசீட்டு பிரபலத்தை இப்படி அவமானப்படுத்துவது துண்டு சீட்டு IT Wing கண்டனம் தெரிவிக்கின்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை