உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கியில் நகை அடகு வைக்க புதிய விதிமுறை; வாபஸ் பெற ரிசர்வ் வங்கிக்கு சீமான் வலியுறுத்தல்

வங்கியில் நகை அடகு வைக்க புதிய விதிமுறை; வாபஸ் பெற ரிசர்வ் வங்கிக்கு சீமான் வலியுறுத்தல்

சென்னை; ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை ஏழை எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் கொடும் அணுகுமுறையாகும். கந்து வட்டிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவும், அவசர அவசியத் தேவைகளுக்கும் ஏழை எளிய மக்கள் உடனடி பண உதவி பெறுவதற்கு வங்கி நகைக்கடன்களையே பெரிதும் நம்பியுள்ளனர். குறைந்த வட்டியில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடன் பெறும் வழியாக இருந்த வங்கி நகைக்கடன் முறையை, ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புக் கடினமானதாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.ரிசர்வ் வங்கியின் பழைய விதிமுறையின்படி, ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் நகை அடகு வைத்ததற்கான வட்டியை மட்டும் செலுத்தினாலே, அதே நாளில் நகையை மீட்டு மறு அடகு வைக்க முடியும். அதன் மூலம் குறைந்த செலவில் நகை ஏலம் விடப்படாமல் ஏழை எளிய மக்கள் காப்பாற்றிக் கொள்ளவும் அவ்விதிமுறை பயனுள்ளதாக இருந்தது. இதனால், தொடர்புடைய வங்கிகளுக்கு வட்டி தொகை முழுமையாகக் கிடைத்ததுடன், வட்டித்தொகை தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்து, வங்கிகளுக்கு லாபம் தருவதாகவும் அந்நடைமுறை இருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ள புதிய விதிமுறையின் படி நகைகளை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாகச் செலுத்தி மீட்டு, நகையைத் திருப்பிய மறுநாள் தான் மீண்டும் அதே நகைகளை அடகு வைத்துப் பணம்பெற முடியும். இதனால் கடன் வாங்கியவர்கள் முழுப் பணத்தையும் திரட்ட வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் மீண்டும் கந்து வட்டி வாங்கி, மீள முடியாத கடன் சுமையில் சிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி நகைக்கடன் குறித்த புதிய விதிமுறைகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Kay Pee Yes
மார் 17, 2025 08:42

பைசா இருந்தா ஆங்கில நகையை எதுக்கு வங்கில வைக்கப் போறாங்க....... Senseless order


KATHIRVELU.K
மார் 16, 2025 15:33

சீமான் அவர்களின் கருத்து மற்றும் கோரிக்கைகள் நியாயமானது. மேற்படி சுற்றறிக்கையால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகையால் reserve பேங்க் ஆஃப் இந்தியா இது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்து மேற்படி சுற்றறிக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.சுயநலத்திற்காக சில வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு கூஜா தூக்கி மொத்த நீதி துறைக்கே கலைக்குழுவை ஏற்படுத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பாராளுமன்றத்தில் சட்ட மீட்டர் கூடிய நமது அரசியல் கட்சியினருக்கு இதைப் பற்றி எல்லாம் கொலை கிடையாது. தங்களுக்கும் எந்தெந்த வகையில் சட்ட பாதுகாப்பு வேண்டுமோ அதை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள்.


Aarthy
மார் 14, 2025 11:53

உங்க உத்தரவுக்கு தான் வெயிட்டிங்.. உத்தரவுக்கு நன்றி யுவர் ஆனர் ,


ra manivannan
மார் 12, 2025 17:17

மக்களின் முக்கிய பிரச்சினைகள் இதுவும் ஒன்றாகும். இதற்க்கு அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.


Hussain Karisal
மார் 12, 2025 10:51

இந்த கருத்தை போன வாரமே வைகோ தெரிவித்துவிட்டார்


NIJAY Sharma.M007
மார் 11, 2025 11:37

அவரு கெட்டது சொன்னா நீ கேக்கலாம் ஆனா யாரு நல்லது சொன்னாலும் எடுத்துக்கலாம் அவர நேர்ல போய் கேள்வி கேளு


Srinivasan Narasimhan
மார் 11, 2025 06:14

இது கேட்ச் 22 சிச்சுவேஷன் சீமான் செல்வதில் உண்மை இருக்கு அதே சமயம் தங்க கடன் தப்பாகவும் மிஸ் யூஸ் செய்யபடுகிறது


visu
மார் 10, 2025 23:48

ஹாஹா இது வங்கிகளின் லாபத்தை அதிகரிக்க ஒரு திட்டம் அதாவது பலகாலமாகவே பாரத ஸ்டேட் வங்கியில் ஒருவருடம் முடியும்போது முழு தொகையும் செலுத்தி நகையை மீட்டு மாரு அடமானம் வைக்க சொல்கிறார்கள் மொத்த தொகை செலுத்த வசதியில்லாதவர்கள்தானே நகையை அடகு வைத்திருப்பார்கள் வட்டி கட்டி எல்லாம் renewal செய்ய விடுவதில்லை .இன்னொன்று இப்படி செய்வதால் அவர்களுக்கு பிராஸிங் சார்ஜ் என்று குறைந்த பட்சம் 900 ரூபாய் மற்றும் நகை மதிப்பீட்டாளர்க்கு 200-300 ரூபாய் என்று கடன் வழங்கும்போதே பிடித்து கொள்வார்கள் இதெற்காகவே இந்த விதி மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை


Ganapathy
மார் 10, 2025 23:11

இங்க சின்னவர் மக்களை நகை அடகு வைக்க சொன்னது ஞாபகம் வருது.


Perumal Pillai
மார் 10, 2025 22:06

ஒரு வருஷத்தில் பெரும்பாலான மக்கள் ஈடு வைத்த நகையை திருப்பிவிட மாட்டார்கள் . அவர்களின் நகையை ஏலம் விட்டு அபகரிக்க மோடியின் மகா மோசடி திட்டம் .


முக்கிய வீடியோ