மேலும் செய்திகள்
தினமும் ஒரு பெருமாள் -07:விசா பிரச்னைக்கு...
22-Dec-2024
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது கண்டனுார். இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளின் பார்வை நம்மீது விழுந்தாலே போதும். கவலை யாவும் தீர்ந்துவிடும். இப்பகுதியை சேர்ந்த ஒருவர் திருப்பதி பெருமாள் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். ஒருநாள் இவரது கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு இங்கு ஒரு கோயில் கட்டுமாறு கட்டளையிட்டார். அதன்படி உருவானதுதான் இக்கோயில். இதை பெரிய பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி சங்கு, சக்கரத்துடன் அருள்கிறார் ஸ்ரீநிவாசப்பெருமாள். இவரது கடைக்கண் பார்வை நம்மீது விழுந்தால் போதும். தீராத பிரச்னைகள் தீர்ந்துவிடும். அலர்மேல்மங்கை தாயார், ஆண்டாள், அனுமன், சக்கரத்தாழ்வார், கருடனுக்கு சன்னதிகள் உள்ளன. வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆவணியில் திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி இங்கு சிறப்பாக நடக்கும். காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியாக 10 கி.மீ., நேரம்: காலை 7:00 - 11:00 மணி மாலை 4:30 - 7:00 மணிதொடர்புக்கு: 97918 31621அருகிலுள்ள தலம்: கொப்புடைய நாயகி 10 கி.மீ., நேரம்: காலை 6:00 - 11:00 மணி மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 99428 23907
22-Dec-2024