உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் மோசடி: 12 பேர் கைது

ஆன்லைன் மோசடி: 12 பேர் கைது

சென்னை:'ஆன்லைன்' வாயிலாக, டாக்டர் உள்ளிட்டோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த, இரண்டு பெண்கள் உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தலைமையிலான போலீசார், சென்னை, தஞ்சாவூர், வேலுார் மாவட்டங்களில் பதிவான, ஆன்லைன் மோசடி புகார்கள் குறித்து விசாரித்தனர். 'ஆன்லைன்' முதலீடு தொடர்பாக, 'பேஸ்புக்'கில் விளம்பரம் செய்து, சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம், 87.92 லட்சம் ரூபாய் மோசடி செய்த, சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சகாபுதீன்,44; கடலுார் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சாதிக் அப்ரிடி,27; பாத்திமா,45; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முஸ்தக் அகமது, 24; சென்னை கே.கே.நகரை சேர்ந்த முகமது உஸ்மான், 67; ஜமிலத் நசீரா,34 உட்பட, எட்டு பேரை நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, எட்டு மொபைல் போன்கள், 12 சிம்கார்டுகள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு, உதவித்தொகை பெற்று தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட டில்லியை சேர்ந்த அசுகுமார்,29; சுபம் குமார், 22; அனுஜ்குமார், 21, ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.வேலுாரை சேர்ந்த நபரிடம் மும்பை போலீஸ் போல நடித்து, அவரை தனிமைப்படுத்தி ஹோட்டலில் தங்க வைத்து, டிஜிட்டல் கைது செய்து, 2.72 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, கேரள மாநிலத்தை சேர்ந்த இம்தியாஸ் ஷா,45, என்பவரை கைது செய்தனர். இவர், தன் மனைவி மஞ்சு பெயரில் வங்கி கணக்கு துவங்கி, மோசடி செய்த தொகையில், 1.30 கோடி ரூபாயை எடுத்தது தெரியவந்தது. இந்த வங்கி கணக்கு, இந்தியாவின் பல மாநிலங்களில் ஆன்லைன் வாயிலான மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதும், 99 புகார்களில் பதிவாகி இருப்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R. SUKUMAR CHEZHIAN
ஏப் 23, 2025 17:00

கொள்ளை அடிக்க தான் நம் பாரத தேசதுக்கு படை எடுத்து வந்தனர் இஸ்லாமிய ஜிகாத் கும்பல்கள், திருடுவதும் கொள்ளை அடிப்பதும் கஞ்சா விற்பதும் இவர்கள் ரத்தத்தில் ஊரிஉள்ளது நாடு பிரிவினை ஆன பிறகு இவர்கள் அங்கு போகாததால் நாம் பாரத அரசு இந்த திருட்டு கும்பல்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்.


மூர்க்கன்
ஏப் 23, 2025 14:11

டூப்ளிகேட் ..காரணமில்லாமலா பணத்தை இழந்திருப்பார்கள்.


R.P.Anand
ஏப் 23, 2025 12:29

புடிச்சி போடுவாங்க வக்காலத்து வாங்க சில கட்சிகள் நீயா நான் ன்னு போட்டி போட்டு சப்போர்ட் பன்றானுங்க இது எங்க போயி முடியும் நு தெரியல


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 23, 2025 08:37

[பண மோசடியில் ஈடுபட்ட டில்லியை சேர்ந்த அசுகுமார்,29 சுபம் குமார், 22 அனுஜ்குமார், 21, ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.] இது நெட்வொர்க் இல்லாத கும்பலு .... ஆனா இதுக்கும் லாடம் கட்டணும் ....


Barakat Ali
ஏப் 23, 2025 08:04

பெரும்பான்மையினர் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள் ..... இஸ்லாமியர்களின் தொழிலே இவைதானா என்று பலரும் நினைக்கும் அளவுக்கு ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 23, 2025 08:32

வேலைக்கு போயி சம்பாதிச்சாலும், ஹவாலா / கடத்தல் எதுவுமில்லாமே கௌவரவமான சொந்தத் தொழிலே செஞ்சாலும் குறிப்பிட்ட பர்சண்டேஜ் மார்க்க முன்னேற்றத்துக்கு போவுதா, இல்லையா ??


Oviya Vijay
ஏப் 23, 2025 07:38

இவர்களது தொல்லை, நாளுக்குநாள் அதிகமாயிக்கிட்டே போவுது...


raja
ஏப் 23, 2025 06:36

உழைத்து வாழாமல் அடுத்தவர்களை மிரட்டி ஏமாற்றி, சட்டத்துக்கு புறம்பாக அனைத்து வேலைகளையும் செய்து வாழும் ஈன பிறவிகள் தான் மார்க்க விடியலின் தொப்புள் கொடி உறவுகள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை