| ADDED : மார் 12, 2024 01:25 AM
சென்னை: சென்னையில் நடக்க உள்ள ஐ.பி.எல்., போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் வழியாக மட்டுமே விற்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கடந்த 2008 முதல் ஐ.பி.எல்., தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இதுவரை, 16 சீசன்கள் நடந்துள்ளன. இந்தாண்டு 17வது சீசன் வரும் 22ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் - -- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதில், எம்.எஸ்.தோனியும், விராட் கோலியும் விளையாட உள்ளதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், இந்தப் போட்டி தொடருக்கான டிக்கெட்கள் அனைத்தும், ஆன்லைன் வாயிலாகவே விற்கப்படும் என்ற தகவல் பரவியுள்ளது.அதனால், டிக்கெட்களை பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, ஐ.பி.எல்., நிர்வாகத்தினர் கூறுகையில், 'முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்றனர்.