உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., அணியில ஏ.சி.சண்முகமும், பாரிவேந்தரும் மட்டும் தான் பாக்கி இருப்பாங்க

பா.ஜ., அணியில ஏ.சி.சண்முகமும், பாரிவேந்தரும் மட்டும் தான் பாக்கி இருப்பாங்க

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி:

சேலம் மாவட்டம், காராமணி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மனில் ஜாதி பெயரை குறிப்பிட்டுள்ளனர். ஜாதி பெயரை குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் போராட வேண்டிய சூழல் ஏற்படும்.

டவுட் தனபாலு:

தமிழகத்துல, பா.ஜ.,வுக்கு ஆதரவான ஒரு சில கட்சிகளின் தலைவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருத்தர்... அவரையும், 'டென்ஷன்' ஆக்குனா, பா.ஜ., அணியில ஏ.சி.சண்முகமும், பாரிவேந்தரும் மட்டும் தான் பாக்கி இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!---

பத்திரிகை செய்தி:

அதிக கடன் வாங்கிய மாநிலங்களில், முதலிடத்தில் உள்ள தமிழகம், அடுத்த மூன்று மாதங்களில், கடன் பத்திரங்கள் வழியாக, 37,000 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது.

டவுட் தனபாலு:

முதல்வர் அடிக்கடி, 'தமிழகத்தை நம்பர்1 மாநிலமாக்குவேன்'னு சொல்றாரு... இந்த அரசு போகிற வேகத்தை பார்த்தால், கடன் வாங்குறதுல தான், நாம நம்பர் 1 இடத்துக்கு வருவோம் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!---

பத்திரிகை செய்தி:

வரும் 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அறிக்கையின்படி, நாடு முழுதும், 25 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2023ல், 96,709 பேர் காசநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அதற்கு முந்தைய 2022ல், 94,171 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2023ல், 2.65 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது.

டவுட் தனபாலு:

இன்னும் ஒரே வருஷத்துல, காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிச்சா, வருஷா வருஷம் பாதிப்பு எண்ணிக்கை குறைய தானே செய்யணும்... இப்படி, ஒரு லட்சத்தை எட்டும் அளவில் பாதிப்பு தொடர்ந்தா, 2025 அல்ல 2050 ஆனாலும், காசநோயை முற்றிலும் ஒழிக்க முடியுமா என்பது, 'டவுட்' தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

K.Ramakrishnan
ஜன 03, 2024 23:10

அவங்க இரண்டு பேருக்கும் கொள்கையே கிடையாது. இரண்டு பேரும் ஏகப்பட்ட காலேஜ்... தனியா யூனிவர்சிட்டியே நடத்துறாங்க... அவங்களுக்கும் சொத்துக்களை காப்பாத்தணும்னு பயம்இருக்கத்தானே செய்யும்... ஏரிகளையும், கூவம் ஆற்றையும் வளைத்து கல்லூரிகள் அமைத்துள்ளனர். அவற்றை பறித்துக்கொண்டால் என்ன செய்வது?


Indian
ஜன 03, 2024 11:01

மடியில் கனம் இருப்பவர்கள் பாஜக கூட்டணியில் இருப்பார்கள் மற்றபடி விலை போகாத அணியில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்


திகழ்ஓவியன்
ஜன 03, 2024 13:58

இருவரும் கல்வி திருடர்கள் ஆகவே வெளியே வரமாட்டார்கள் ,


Anbuselvan
ஜன 03, 2024 14:33

என்ன சொல்கிறீர்கள். ஒரு போதும் திமுக பாஜக கூட்டணியில் இணையாது.


Shekar
ஜன 03, 2024 09:54

ஈடி ஜாதிப்பெயரில் நோட்டீஸ் அனுப்பியது என்பது எல்லாம் ஒரு வகை போலி சமூகநீதி நாடகம். அந்த நபரின் பெயர் சம்பந்தப்பட்ட டாக்குமென்டில் எப்படி இருக்கிறதோ அந்த பெயரில்தான் அனுப்புவார்கள். நம்ம அமைச்சர்கள் போல சாதியை தெரிந்து வைத்துக்கொண்டு நீ அந்த ஜாதிதானே என்றெல்லாம் பார்த்து ஈடி நோட்டீஸ் அனுப்பாது.


Velan Iyengaar
ஜன 03, 2024 10:28

சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டா?? எது அப்படிப்பட்ட டாகுமெண்ட்??


Shekar
ஜன 03, 2024 12:10

அந்த ஆள் நிலம் வாங்கிய விவகாரம் ஈடி கிட்ட போயிருக்கு அந்த நிலம் வாங்கிய டாகுமெண்ட் பற்றித்தான் நான் கூறுகிறேன்


Velan Iyengaar
ஜன 03, 2024 13:15

நிலம் வாங்கிய டாக்குமென்டில் பெயர் தானே இருக்கும்.. அப்படியே ஜாதி பெயர் இருந்தாலும் அது ஜாதி பெயர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்... பெயருடன் ஜாதி சேர்க்கும் வழக்கம் தான் தமிழகத்தில் பெரியார் புண்ணியத்தில் வழக்கொழிந்துவிட்டதே??


தத்வமசி
ஜன 03, 2024 13:43

வேலன் ஐயங்கார் என்பதில் ஐயங்கார் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா ? அல்லது நீங்கள் சொல்லும் பெரியார் ஒழித்த ஜாதி பட்டமா ?


Shekar
ஜன 03, 2024 13:44

அந்த ஆளே பெயரில் நாயக்கர்ன்னு கையெழுத்து போடுவான்.


Shekar
ஜன 03, 2024 13:46

அது சரி இப்போ ஆஸ்திரேலியாவில் சம்மர்தான், ஆனால் இப்படி கொழுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை


Velan Iyengaar
ஜன 03, 2024 20:32

என் பெயர் பின்னால் இருக்கும் ஜாதி பெயர் ஒரு குறியீடு... அது எல்லோருக்கும் மிக மிக நன்றாகவே புரிந்து இருக்கும் வேலனுக்கு பின்னால் ஐயங்கார் இருக்கக்கூடாது என்று எதற்கு சொல்கிறார்கள்?? அதை சொல்லவைக்கவே இந்த பெயர்


venugopal s
ஜன 03, 2024 09:07

நீங்கள் என்ன தான் ஆயிரம் சொன்னாலும் இந்தக் கடன் வாங்கும் விஷயத்தில் தமிழக அரசு எவ்வளவு தான் முயன்றாலும் அவர்களுடைய குரு மத்திய பாஜக அரசை அடிக்க முடியாது!


Ramesh Sargam
ஜன 03, 2024 08:01

அதிக கடன் வாங்கிய மாநிலங்களில், முதலிடத்தில் உள்ள தமிழகம் - தமிழக மக்களை எப்பொழுதும் கடனாளிகளாக வைப்பதில் மும்முரம் காட்டுகிறது இந்த திருட்டு திமுக அரசு. ஆனால், தமிழக முதல்வர் அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல், பலகோடிகளில் சொகுசு கார்கள் வாங்கி, அவைகள் புடைசூழ 'சென்னை கிரிவலம்' வந்துகொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மக்கள் நலன் அறியாத ஒரு முதல்வரை நாம் கண்டதுண்டோ..??


Selvakumar Krishna
ஜன 03, 2024 10:48

உனக்கு தமிழ் நாட்டை பற்றி என்ன தெரியும்?


jaya
ஜன 03, 2024 12:15

யப்பா லூசா நீ ??


Duruvesan
ஜன 03, 2024 07:20

தயவு செய்து எவனும் பிஜேபி கூட கூட்டு வேணாம். போய்டுங்க. பிஜேபிக்கு நோட்டா ஓட்டு கிடைக்கும்னு ஏளனம் செய்யுங்க. எப்படியோ நாசமா போங்க . DMDK தனியா நிக்கணும். பாதி வன்னியர் DMDK கு வேலை செய்வாங்க.தர்மபுரி ல அன்புமணி ADMK DMK நக்கிட்டு போறதை பாக்க தானே போறீங்க


Svs Yaadum oore
ஜன 03, 2024 07:01

பா.ஜ., அணியில ஏ.சி.சண்முகமும், பாரிவேந்தரும் மட்டும் தான் பாக்கி இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்ல என்று செய்தி ..இந்த கட்சியில் எவன் இருப்பான் என்பது முக்கியமில்லை ...இப்போதைய தேவை திராவிட எதிர்ப்பு....திராவிடத்தை எதிர்க்கும் விருப்பம் உள்ளவர்கள் தான் முக்கியம் ..டாக்டர் கிருஷ்ணசாமி ப ஜா க ஆதரவாளர்தான் ...சேலம் மாவட்டம், காராமணி விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள கடிதம் இங்குள்ள உளவுதுறை சதி ....வனத்துறை ஜாதி பெயருடன் வழக்கு பதிவு ...அதை அப்படியே ஜாதி பெயருடன் பதிவு செய்தது அமலாக்கத்துறை ....இங்குள்ள வனத்துறை எதற்கு ஜாதி பெயர் ??....


sankaranarayanan
ஜன 03, 2024 06:50

காசநோய்க்கு சிகிச்சை உள்ளது ஆனால் திராவிட விடியல் அரசில் காசு நோய்க்கு சிகிச்சை உள்ளதா என்றால் உள்ளது அதுதானைய்யா மத்திய அமலாக்க துறையினர் அதிரடி சோதனையின் பலன் சிறைத்தண்டனை


மேலும் செய்திகள்