உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 தகவல்கள் கேட்டவருக்கு ஒன்றுக்கு மட்டுமே பதில்

40 தகவல்கள் கேட்டவருக்கு ஒன்றுக்கு மட்டுமே பதில்

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகங்களில், பதிவு சட்டத்திற்கு முரணாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து, 40 இனங்களில் தகவல்கள் கோரிய மனுதாரருக்கு, ஒரு இனத்திற்கு மட்டும் தகவல் வழங்க தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் தென்றல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணவாளன். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2023 மே மாதம் அனுப்பிய மனுவில், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு சட்டத்திற்கு முரணாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து, 40 இனங்களில் தகவல்கள் கோரியுள்ளார். தொடர்ந்து, 2023 ஜூலையில், முதல் மேல்முறையீட்டு மனு மற்றும் நவம்பரில் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தார். இது தொடர்பாக, சமீபத்தில் நடந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், மாநில தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர், 40க்கும் மேற்பட்ட தகவல்களை கோரியுள்ளார். இது, மிகவும் அதிகப்படியான தகவல்கள். இவற்றை சேகரித்து தொகுத்து வழங்குவதால், பொதுத்தகவல் அலுவலரின் அன்றாட பணிகள் பாதிக்கும். எந்த இனத்திற்கான தகவல்கள் தற்போது தேவைப்படுவதாக, ஆணையத்தால் மனுதாரரிடம் கேட்கப்பட்டு உள்ளது. அதில், 15வது இனத்துக்கான தகவல் தனக்கு தேவைப்படுவதாக தெரிவித்துஉள்ளார். எனவே, இனம், 15க்கான சரியான தகவல்கள் மற்றும் அதற்கான நகல்கள் ஆகியவற்றை, 15 நாட்களுக்குள், விரைவு தபாலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை