உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மியூசிக் அகாடமிக்கு எதிர்ப்பு: விருதை திருப்பி அளித்தார் சித்ரவீணை ரவிக்கிரண்!

மியூசிக் அகாடமிக்கு எதிர்ப்பு: விருதை திருப்பி அளித்தார் சித்ரவீணை ரவிக்கிரண்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மியூசிக் அகாடமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சித்ரவீணை ரவிக்கிரண், எம்எஸ் சுப்புலட்சுமி பெயரிலான விருதையும், அதனுடன் தனக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் பரிசுத்தொகையை திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளார். பரிசுத்தொகையுடன் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாயை சேர்த்து அளிப்பதாகவும் கூறியுள்ளார்.பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை அறிவித்தது. இந்த விருதுடன் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருது, ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட இருந்தது. இந்த முடிவுக்கு கர்நாடக இசை கலைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.எஸ். சுப்புலட்சுமியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு எப்படி அவரது பெயரில் விருது வழங்கலாம் என கேள்வி எழுப்பினர்.இந்நிலையில், மியூசிக் அகாடமியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கர்நாடக இசைக்கலைஞரான சித்ரவீணை ரவிக்கிரண், தனக்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி' விருதை, ஏழு மாதங்களுக்கு முன் திருப்பி அளித்துள்ளார்.ரவிக்கிரணுக்கு, 2017ம் ஆண்டு விருது வழங்கிய மியூசிக் அகாடமி, எம்எஸ் சுப்புலட்சுமி பெயரிலான ரூ.1 லட்சம் விருது, பரிசுத்தொகையையும் வழங்கியிருந்தது. அதை தற்போது திரும்ப மியூசிக் அகாடமியிடமே ஒப்படைத்த ரவிக்கிரண், கூடுதலாக ரூ.10 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து கொடுத்துள்ளார்.இது தொடர்பாக மியூசிக் அகாடமி தலைவர் முரளிக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: மியூசிக் அகாடமி அல்லது அதில் உள்ள நிர்வாகிகளை அவமரியாதை செய்யவோ அல்லது விளம்பரத்திற்காகவோ இந்த விருதுத்தொகையை திருப்பித்தரவில்லை. மூன்று காரணங்களுக்காக இதனை திரும்பக் கொடுக்கிறேன்.முதல் காரணம், 2017ம் ஆண்டு வரை, இறப்புக்கு பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரை களங்கப்படுத்துவதற்கு மியூசிக் அகாடமி தலைவர் முரளி கொந்தளித்து வந்தார்.இரண்டாம் காரணம், மிருதங்க வித்வான் பாலக்காடு ராமச்சந்திர ஐயரை கவுரவிக்கும் வகையில், விருது வழங்கும் அறக்கொடை திட்டம் என்னால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 'சங்கீத கலாநிதி' விருதை திருப்பிக் கொடுத்த நிலையில், இந்த அறக்கொடையை மியூசிக் அகாடமி திருப்பி அளித்துள்ளது.மூன்றாவது காரணம், சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுத்தது தொடர்பான மியூசிக் அகாடமியின் தகவல் தொடர்பில் இருந்த, பணத்தை மையப்படுத்திய விமர்சனம் என்னை காயப்படுத்தியது. அதனால் தான் கூடுதலாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன்.இவ்வாறு ரவிக்கிரண் தெரிவித்துள்ளார்.டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமச்சந்திர ஐயருக்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திருப்பி அளிப்பதாக அவரது குடும்பமும் தெரிவித்து இருந்தது. மேலும், இந்தாண்டு மியூசிக் அகாடமி நிகழ்ச்சிகளில் இருந்து விலகிக்கொள்வதாக அவரது பேரன் பாலக்காடு ராமபிரசாத், திருச்சூர் சகோதரர்கள், ரஞ்சனி- காயத்ரி, விசாகா ஹரி மற்றும் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் அறிவித்து இருந்தனர். டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிராக சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

ஆரூர் ரங்
நவ 26, 2024 07:46

இசை சாதிப் பிரச்சினையால் சிலருக்கு மறுக்கப்படுகிறது என அபத்தமாக பேசுகிறார் கிருஷ்ணா. இதே ரவி கிரண் மற்றும், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பலர் அரசுப் பள்ளிகளுக்கு சென்று ஏழை எளிய மாணவர்களுக்கும் இசையை அறிமுகம் செய்து வைத்ததை அறிந்தே கிருஷ்ணா இப்படிப் பேசுவது யாருடைய தூண்டுதலின் பேரில்?


Easwar Kamal
நவ 25, 2024 21:51

ms சுப்புலக்ஷ்மி அவர்களின் கண்ணீர் gana குரலால்தான் திருப்தி பெருமாளே துயில் எழுகிறார். இன்றைக்கு முளைத்த காலன்கள் எல்லாம் க்கூக்குரல் இடுகிறது. இந்த கூட்டங்கள் எல்லாம் சென்னை தண்டி எவனுக்கும் தெரியாது. எல்லாம் காலத்தின் கொடுமை.


vbs manian
நவ 25, 2024 17:46

அகாடமி வாசலில் பெரியார் சிலை பெரியார் பெயரில் விருது எல்லாம் எதிர்காலத்தில் வருமோ.


vbs manian
நவ 25, 2024 17:43

மவுண்ட் ரோடு மகாலட்சுமிக்கு கர்நாடக இசை மேல் ஏன் இந்த கோபம் வக்கிர பார்வை.


ஆரூர் ரங்
நவ 25, 2024 13:43

முரளி ஹிந்து பத்திரிக்கையை மட்டமாக விமர்சித்தால் விருது கொடுப்பாரா? அதற்கு பதில் ஒரு கொங்கு மண்டல சமுதாயத்தை தவறானவர்களாக சித்திரித்து கதை எழுதிய ஆளை விட்டு கிருஷ்ணா வுக்கு முட்டுக் கொடுக்க முயன்றுள்ளார். ஊடக தர்மத்துக்கே கேவலம்.


S Srinivasan
நவ 25, 2024 13:23

The Hindu family should come out of DMK cluster if they continue they will be doomed Mr Murali is another HRCE minister in presemt govt, outside he will show one face and inside one face


Rajagopalan R
நவ 25, 2024 12:47

ஹிந்து தி மு க தயவில் ஓடுகிறது. முரளி பாவம் ராம் தயவில் இருக்கிறார். பாவம் அவரை குறை கூறாதீர்கள்


ஆரூர் ரங்
நவ 25, 2024 15:00

அரசு விளம்பர வருமானம் முக்கியம்.


vbs manian
நவ 25, 2024 09:44

சரியான புரிதல் உணர்வு உள்ள இசை கலைஞர்கள் செய்ய வேண்டியதை செய்கிறார். அரசியல் ஆட்டம் நுழைந்து விட்டது. எந்தரோ மஹாநுபாவர்கள் திகைத்து நிற்பார்கள்.


Barakat Ali
நவ 25, 2024 09:24

திராவிடம் புகுந்த இடமும், ஆமை புகுந்த இடமும் ............


selva kppk
நவ 25, 2024 07:27

இசை எல்லா மக்களுக்கும் சேரக்கூடாதென்பதில் இந்த கூட்டம் கவனமாய் இருக்கிறது


karthik
நவ 25, 2024 07:55

எந்த கூட்டம் தம்பி? ட்ராவிடியா கூட்டத்தை ஜால்ரா அடிக்கும் கூடமா இல்லை இசைகாக உழைக்கும் கூட்டமா ? ட்ராவிடியா நா ஓடி போயிரு


ஆரூர் ரங்
நவ 25, 2024 11:04

எந்த சபாவிலாவது சாதிப் பின்புலம் விசாரித்து அனுமதிச் சீட்டு கொடுத்ததுண்டா? ஜேசுதாஸ், மதுரை சோமு பாடாத சபா உண்டா?.


SUBRAMANIAN P
நவ 25, 2024 14:08

மனுஷ ஜென்மம் இல்ல.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 25, 2024 14:15

இந்த பிரச்சினையில் திமுகவின் சதி வளையம் அதிக அளவில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இதே நிலை நீடித்தால் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் வென்ற பின்னர் மியூசிக் அகாடமி காணாமல் போய்விடும்


Bala
நவ 25, 2024 20:41

கர்நாடக இசையை அரசியல் தளத்தில் பாமர மக்களுக்கு அந்த காலத்திலேயே எடுத்து சென்றவர் திரு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள். பிற்காலத்தில் சுதா ரகுநாதன் போன்றவர்கள் மேலும் பாமர மக்களிடம் எடுத்து சென்றனர். இந்த திராவிடியாக்கள் இசைக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை.


முக்கிய வீடியோ