உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓபிஎஸ் என்னை குறை சொல்கிறார்; நான் அவரை குறை சொல்ல மாட்டேன்: நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ் என்னை குறை சொல்கிறார்; நான் அவரை குறை சொல்ல மாட்டேன்: நயினார் நாகேந்திரன்

பவானி: என்னையோ எனது உதவியாளரையோ ஓபிஎஸ் அழைக்கவில்லை. ஓபிஸ் என்னைப் பற்றி குறை கூறுகிறார்; நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அண்மையில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்ற அதிருப்தியில் ஓபிஎஸ் கூட்டணியில் விலகியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே, நிருபர்களிடம் ஓபிஎஸ் என்னை தொடர்பு கொண்டு இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்து இருப்பேன் என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z9fbkz5e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமரை சந்திப்பது தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு பதிலளித்து ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் ''பிரதமரை சந்திக்கும் விவகாரத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதில் எள்ளளவும் உண்மை இல்லை. 6 முறை போனில் தொடர்புகொண்டும் நயினார் நாகேந்திரன் அழைப்பை எடுக்கவில்லை'' என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார்.இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 03) ஈரோடு மாவட்டம், பவானியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கடிதம் அனுப்பி இருக்கிறார் என்று சொன்னது எனக்கு தெரியவில்லை. அந்த கடிதம் இன்னும் வந்து சேரவில்லை. அவர் கடிதம் வந்து சேர்ந்தால் கண்டிப்பாக நான் உங்களுக்கு எடுத்து காட்டுகிறேன். அப்போது யார் உண்மையை சொல்லி இருக்கா, யார் பொய் சொல்லி இருக்கா என்பது உங்களுக்கு தெரியும்.

இந்த மாதிரி...!

எதையோ ஒன்றை குற்றம் சாட்டுவதற்காக கூறுகிறார்கள். தமிழக முதல்வரை எடுத்த உடனே பார்த்து பேசிட முடியாது. ஏற்கனவே அவருடன் தொடர்பு இருந்திருந்தால் தான் இந்த மாதிரி முடிவு எடுத்து இருக்க முடியும் என்பது எல்லோருடைய கருத்தாக இருக்கிறது. அது குறித்து அவங்களை பற்றி நான் குறை சொல்வதற்கு இல்லை. அவர்கள் முடிவு எடுப்பதின் கீழ், முடிவு எடுத்ததற்கு ஒரு காரணத்தை சொல்கிறார்.

குறை சொல்லமாட்டேன்!

ஓபிஎஸ் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் தான் அவரை தொடர்பு கொண்டேன். முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்கு முதல் நாள் நான் அவரை தொடர்பு கொண்டேன். இது முன்னாடி சட்டசபை நடக்கும் போது, பலமுறை அழைத்து இருக்கிறேன். எனது உதவியாளர் நான் கூறி பலமுறை அழைத்து இருக்கிறார்கள். அவர் ஒரு குறையாக சொல்லி இருக்கிறார். நான் அவரை பற்றி குறை சொல்லமாட்டேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

குறுஞ்செய்தி காட்டிய ஓபிஎஸ்

பிரதமரை சந்திப்பது பற்றி நயினார் நாகேந்திரனுக்கு கடந்த ஜூலை 14 மற்றும் ஏப் 12 ஆகிய தேதிகளில் அனுப்பிய குறுஞ்செய்தியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நிருபர்கள் சந்திப்பில் காண்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 03, 2025 13:23

எதற்காக இவர் பிரதமரை சந்திக்க வேண்டும். பிரதமரை சந்தித்தால் என்ன நடந்து இருக்கும். அதிமுகவில் இவருக்கு இப்போது செல்வாக்கு சுத்தமாக சரிந்து விட்டது. இனி அதிமுகவில் இவரால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டார். திமுகவில் இவரை இணைத்து கொண்டால் அதிமுகவை உடைத்து விடலாம் என்பது திமுக கணக்கு. திமுகவில் இப்போது உள்ள விசிக மதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் ஆட்சியில் உரிமை என்ற கோஷத்தை ஓபிஎஸ் பிரேமலதா இணைப்பை காட்டி அவர்களின் வாயை கட்டி விடலாம். அதிக தொகுதிகள் கேட்பது தடுக்கலாம். இவர் பிரேமலதா போன்றவர்கள் திமுகவின் பகடை காய்கள் தான். திமுக ஏற்கனவே நடிகர் விஜய்யை களமிறக்கி உள்ளதால் கமல்ஹாசன் போல் இல்லாமல் விஜய் மிகப் பெரிய அளவில் அதிமுக வாக்குகளை பிரித்து திமுக வெற்றிக்கு வழி வகுப்பார் என்று திமுக திடமாக நம்புகிறது. விஜய்யால் அதிமுக வாக்குகள் பிரியுமா அல்லது திமுகவின் வாக்குகள் பிரியுமா என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியும். ஆனால் திமுக விஜய் கட்டாயம் அதிமுக வாக்குகள் பிரிப்பார் என்று திடமாக நினைக்கிறது. நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் என்று ஏதுமில்லை.


Jack
ஆக 03, 2025 12:29

OPS நமுத்து போன வூசி வெடி


Anantharaman Srinivasan
ஆக 03, 2025 11:49

அரசியலுக்கு UNFIT .. ..


Ramesh Sargam
ஆக 03, 2025 11:44

போங்கய்யா நீங்களும், உங்கள் அசிங்க அரசியலும்.


S.L.Narasimman
ஆக 03, 2025 11:38

நிச்சயமாக ஓபீசை மக்களோ அதிமுகாவினரோ நம்ப மாட்டார்கள். சுயநலவாதி.


Svs Yaadum oore
ஆக 03, 2025 10:49

ஓபிஎஸ் க்கு ஆயிரம் குறை இருக்கலாம் ....ஆனால் அவர் முன்னாள் முதல்வர் ....இங்குள்ள திராவிட கட்சி தலைவர்களுக்கு தி மு க , அ தி மு க என்று முனுசாமி சொன்னது போல பங்காளிகள் உறவு இருக்கலாம் ....ஆனால் அடி மட்டத்தில் அ தி மு க தொண்டர்கள் இவர் விடியலை சந்தித்ததை ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள் ..தி மு க எதிர்ப்பில் வளர்ந்ததுதான் அ தி மு க .... ராமநாதபுரத்தில் ஜெயித்திருந் தால் இந்நேரம் ஓபிஎஸ் மத்திய அமைச்சர் ...அதிலும் அவர் தோற்றதற்கு யார் காரணம் ??...


ramesh
ஆக 03, 2025 11:48

ops தொடர்ந்து பழனிசாமியால் அவமான படுத்த பட்டார் .அதை தொடர்ந்து தற்போது பழனிசாமி உடன் கூட்டணி அமைந்ததால் மோடி சந்திக்க அனுமதிக்க பட வில்லை . ops க்கும் ஸ்டாலின் க்கும் எந்த விரோதமும் இல்லை . அவமான படுவதை விட எதிர் கட்சிகாரர் கூட பரவாயில்லை என்று முடிவெடுத்து இருக்கிறார் . பன்னீர் செல்வம் இடைக்கால முதல்வராக இருந்தபோது கூட dmk காரர்களை எதிரியாக பார்க்கவில்லை மரியாதயுடன் தான் நடந்து கொண்டார்


vivek
ஆக 03, 2025 13:24

திருப்பி தரவேண்டாம்.


Oviya Vijay
ஆக 03, 2025 10:31

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்துல நடிகர் வீரப்பா பேசுற சபாஷ் சரியான போட்டி டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது... போடுங்க... போடுங்க... இதே மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருங்க... எங்களுக்கு எல்லாம் ஜாலியா இருக்கு...


vivek
ஆக 03, 2025 11:49

அங்கே திமுக உதிரி எல்லாம் பிசிக்கிட்டு போகுது.......


vivek
ஆக 03, 2025 11:51

நயினார் தான் வஞ்சி கோட்டை வாலிபன் ....சரியா சொன்னிங்க


மணி
ஆக 03, 2025 10:23

அவன் கெடக்கிறான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை