உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் ஒப்பந்த பணிகளை முடிக்க உத்தரவு

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் ஒப்பந்த பணிகளை முடிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நகரங்களில், 516 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் சாலை சீரமைப்புக்கு, பிப்., 15க்குள் ஒப்பந்த பணிகளை முடிக்க வேண்டும் என, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தேதி, மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள், பல்வேறு வளர்ச்சி மற்றும் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி, சென்னை மாநகராட்சியில் 250 கோடி ரூபாய்; மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு 228 கோடி ரூபாய்; பேரூராட்சிகளுக்கு 38 கோடி ரூபாய் மதிப்பில் சாலை சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளன.மொத்தம், 516 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை சீரமைப்பு பணிக்கான ஒப்பந்தத்தை, பிப்., 15க்குள் முடிக்க, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையால், பல சாலைகள் சேதமடைந்துள்ளன. மார்ச் மாதம், தேர்தல் அறிவிப்பு வரும். அதற்கு முன், சாலை உட்பட அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெண்டர் அளிக்கப்பட்டவுடன், பணிகளையும் விரைந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பு
ஜன 30, 2024 17:28

சீக்கிரம் போடுங்க அப்பத்தான் ஒரே மாசத்தில் பேர்த்து எடுத்துற முடியும்.


DVRR
ஜன 30, 2024 17:06

ரூ 4000 கோடி மாதிரியா


அசோகன்
ஜன 30, 2024 11:18

அள்ளி தெளித்தது போல் ரோடு போடு மிச்சத்தை ஆட்டைய போடு ????????????????


duruvasar
ஜன 30, 2024 10:41

கையோடு சென்னை மக்களுக்கு அதே காலக்கெடுவிடுக்குள் கொசு வழங்கும் திட்டத்தையும் முடிக்க மேயர் அக்கா பிரியா வேலைகளை முடிக்கி விடவேண்டும்.


A Viswanathan
ஜன 30, 2024 09:53

இதே போல் கோவை மாநகராட்சிக்குஉட்பட்ட சாலைகளை சீர்ரமைக்கும் பணிகளை முடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை