உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் மொழித்துறையை மூடும் வெளிமாநில பல்கலைகள்

தமிழ் மொழித்துறையை மூடும் வெளிமாநில பல்கலைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'பல்கலைகளில் மூடப்பட்டுள்ள தமிழ் துறைகள் மீண்டும் செயல்பட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.நாட்டில் ஹைதராபாத் பல்கலை, உஸ்மானியா பல்கலை, பெங்களூரு பல்கலை, மைசூரு பல்கலை, மும்பை பல்கலை உள்ளிட்டவற்றில், தமிழ் துறைகள் இயங்குவதாக, அவற்றின் இணையதளங்களில் தகவல் உள்ளது.

செயல்படவில்லை

அந்தந்த மாநிலங்களில், தமிழ் மொழியில் ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, பேராசிரியர் பணியிடங்கள் நியமிக்கப் படாததால் துறைகள் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.இதுகுறித்து, தமிழறிஞர்கள் கூறியதாவது: ஆக்ரா, சண்டிகர், பாட்டியாலா, கோல்கட்டா, பஞ்சாப், அலகாபாத், லக்னோ பல்கலைகள் மற்றும் டில்லி லேடி ராம் கல்லுாரி உள்ளிட்டவற்றில், தமிழ் துறைகள் இயங்கின. பெரும்பாலானவை சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டன.தமிழகத்தில் சென்னை பல்கலை உள்ளிட்டவற்றில், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், பெர்சிய மொழிகளுக்கான தனித்துறைகள் செயல்படுகின்றன. இங்குள்ள பிற மாநில மாணவர்கள், அவர்களின் தாய்மொழியில் ஆய்வு செய்ய முடிகிறது அல்லது ஒப்பீட்டு மொழியியல் ஆய்வு செய்ய முடிகிறது.

நிதியுதவி

தமிழக அரசியல்வாதிகளும், அரசும், வெளிநாட்டு பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க கோடிக்கணக்கில் நிதியுதவி அளிக்கின்றனர். இதனால், தமிழக அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் வெளிநாடுகளில் கிடைக்கிறது. ஆனால், நம் நாட்டில் உள்ள பல்கலைகளில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், அவை மூடப்படுகின்றன. இதில், அரசும், தமிழாசிரியர்களும் கவனம் செலுத்துவதில்லை. இதனால், வெளிமாநிலங்களில் பணியாற்றுவோரின் வாரிசுகள், தாய்மொழி கல்வியில் ஆய்வு செய்யும் வாய்ப்பை இழக்கின்றனர். இதை அரசு கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
மே 28, 2024 12:45

இங்கேயே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர். ஏழாயிரத்துக்கும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லையாம். இந்த லட்சணத்தில் மற்ற மாநில பல்கலைக்கழகங்கள் தமிழ்த்துறைகளை நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் ஒன்றுதானே.


Sampath Kumar
மே 28, 2024 12:00

இந்த பிஜேபி ஆட்சில் நிதி உதவி கிடைக்கும் மற்ற மொழிகள் எல்லாம் சும்மா பேருக்கு தான் நாசமாக போறதுக்கு நல்ல வழியை தேர்ந்து ஏடுத்துட்டானுக


V RAMASWAMY
மே 28, 2024 09:36

தமிழகத்தில் மற்ற மாநில மொழித்துறையையும் உண்டாக்குங்கள், பின் மற்ற மாநிலங்கள் தாமாக முன்வந்து தமிழுக்கும் துறை ஏற்படுத்துவார்கள். நாம் தமிழ் தமிழ் என்று வெறித்தனமாக கத்தினால் மட்டும் போதாது, பெருந்தன்மை வேண்டும்.


GoK
மே 28, 2024 09:13

என்று தமிழ்நாட்டில் தமில் இல்லை தமிள் என்று சொல்லாமல் எங்கும் மக்கள் தமிழ் பேசத்தொடங்குகின்றனரோ அப்போது இங்கும் எங்கும் தமிழ் வளரும் விளம்பரப் பலகை வைக்காமலே.


mindum vasantham
மே 28, 2024 09:07

தமிழ் காத்த தூய தளபதி விஜய் வரட்டும் கிறிஸ்டின் ஆக வராமல் ஹிந்துவாக வரட்டும் அம்மா ஹிந்து தான


duruvasar
மே 28, 2024 08:15

அந்தந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் துறை இயங்கும் அறைகளின் வெளிப்புற சுவர்களில் தமிழ் வாழ்க என்ற பிளாஸ்டிக் போர்டை யாவது வைத்திருந்திருக்கலாம். நம்ம ஊரிலேயே பில்டிங் மேல் இந்த போர்டை வைத்துத்தானே தமிழை வளர்கிறோம்.


spr
மே 28, 2024 07:06

"தமிழக அரசியல்வாதிகளும், அரசும், வெளிநாட்டு பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க கோடிக்கணக்கில் நிதியுதவி அளிக்கின்றனர். இதனால், தமிழக அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் வெளிநாடுகளில் கிடைக்கிறது." நன்றிக்கடனாக முனைவர் பட்டம் Doctorate வழங்குகின்றனவே. படிக்காத தற்குறிகளும் தங்களை முனைவர் என்று பெரும்பாலும் "டாக்டர்" என்று ஆங்கிலத்தில்தான் போட்டுக் கொள்கிறார்கள் அதனைக் கூடாது தமிழில் போடுவதில்லை தமிழ் என்று பேசுவதெல்லாம் ஒரு பைசா செலவு செய்யாமல் அவர்கள் பிழைக்க ஒரு வழி.இளைஞர்களுக்கு உதவும் நீட் தேர்வுப் பயிற்சிக்கே செலவு செய்ய விரும்பாத இவர்கள் தமிழை வளர்க்கச் செலவு செய்வார்களா


Duruvesan
மே 28, 2024 06:49

விடியளு எடு பேனாவை, எழுது கடிதம் மத்திய அரசுக்கு, நம்ம வேலை முடிஞ்சிடும். அங்க எல்லாம் தமிழ் படிக்க வரல, அவர் எவ்வளவு நாளைக்கு அங்க தமிழ் படிக்கணும்..


Duruvesan
மே 28, 2024 06:47

மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி அதுக்கு பதில் வரலைன்னு சோகமா சொல்றாங்க


நிக்கோல்தாம்சன்
மே 28, 2024 05:41

தமிழை அழிப்பது தமிழக மக்கள் தான் , கடற்கரை சமாதிக்கு, பேனாவிற்கு செலவழிக்கும் மனிதனை அரியணையில் அமர்த்த அவர்கள் தான் வோட்டளித்தனர் , அவனுக்கு அணை கட்டவோ , தமிழ் வளர்க்கவோ நேரம் எது ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை