உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; ஒட்டன்சத்திரம் அருகே துயர சம்பவம்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; ஒட்டன்சத்திரம் அருகே துயர சம்பவம்

ஒட்டன்தசத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65). அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28 ) என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டி தாயார் வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராக்கு தொடர்பு ஏற்பட்டதால் அந்த நபருடன் 17. 6.2025 அன்று மாலை 6 மணி அளவில் வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாள், மகள் காளீஸ்வரி ஆகியோர் இரண்டு பேரும் பேத்திகளான லித்திக்ஸா (7),தீப்தி (5) குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Apposthalan samlin
ஜூன் 18, 2025 17:22

பாவம்


Ganesun Iyer
ஜூன் 18, 2025 15:23

மற்ற எல்லாருக்கும் பெயர் இறக்கு, பள்ளப்பட்டி காரருக்கு மட்டும் பெயர் இல்லியா?


Natchimuthu Chithiraisamy
ஜூன் 18, 2025 10:44

பள்ளபட்டி என்றால் பெயர் போட தைரியம் இல்லை என்ன செய்ய


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை