உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முப்பெரும் விழா என்ற கடிதத்தில் கதறல்: முதல்வருக்கு விஜய் பதில்

முப்பெரும் விழா என்ற கடிதத்தில் கதறல்: முதல்வருக்கு விஜய் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஆள்வைத்து கதையாடல் செய்தோர் தற்போது புலம்பத் துவங்கி உள்ளனர். முன்கூட்டியே ஒப்புக் கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்ற பெயரில் வெளிப்படுத்தியிருந்தனர்,'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

விஜய் பயணம்

தவெக தலைவரான விஜய், திருச்சியில் இருந்து வாரந்தோறும் மக்களை சந்திப்பு பயணத்தை துவக்கி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0iljro2y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கடிதம்

இந்நிலையில், திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ,'' பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எக்குக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது,'' எனக்குறிப்பிட்டு இருந்தார்.

புலம்பல்

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர்.புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே பழந்தமிழ் மரபு? இன்னும் என்னென்னவோ வெறுப்பையும் விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் அக்கடிதத்தில் அழுதுகொண்டிருந்தன.

மக்களுக்கு தெரியும்

வெளியே கொள்கை, கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?பொய் வாக்குறுதிகளை அள்ளி அள்ளித் தெளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, கேள்வி கேட்டுத் தங்களது உரிமைகளுக்காகப் போராட வரும் அதே சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுபவர் யார் என்றும் தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?

கேள்வி

தமிழகம் தாண்டியும் தவெகவுக்கு உருவாகி இருக்கும் தன்னெழுச்சியான புத்தெழுச்சி, இப்போது அவர்களை ஏகத்துக்கும் குமுற வைத்துள்ளது. பொதுமக்களுக்கு இவர்கள் செய்யும் இடையூறுகள் அனைத்தையும் பற்றி, மக்களே கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.மக்கள் எழுப்பும் கேள்விகளில் சில இதோ:*வாக்குறுதி தந்து வாக்குகளை வாங்கி, ஆட்சிக்கு வந்த பின்னர் வழக்கம்போல ஏமாற்றியதால் உரிமைக் குரல் எழுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடியதா இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு? மாறாக. கைது செய்து தூக்கிச் சென்று அடக்கி ஒடுக்கித்தானே மகிழ்ந்தது?*அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்தை அன்போடு, கனிவோடு அணுகியதா. இந்த அவலமிகு தி.மு.க. அரசு?*மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தைக்கூட மதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் நடந்ததுதானே இந்தத் திறனற்ற தி.மு.க. அரசு?*விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டுக் குதூகலித்ததுதானே இந்தக் கொடிய தி.மு.க. அரசு?*பரந்தூர் விவசாயிகளின் வருடக்கணக்கான போராட்டத்தையும் பொருட்படுத்தாமல் வஞ்சிப்பதுதானே இந்த வஞ்சகத் தி.மு.க. அரசு?*சாம்சங் தொழிலாளர் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் தட்டிக் கழிப்பதுதானே இந்தத் தொழிலாளர் விரோதத் தி.மு.க அரசு?*மீனவர்களின் கண்ணீரைத் துடைக்காமல், கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதுதானே இந்தக் கையாலாகாத தி.மு.க. அரசு?*மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தைப் பற்றிக் கவலை கொள்ளாத கல்மனம் கொண்ட கபட நாடக அரசுதானே இந்தத் தி.மு.க. அரசு?இடையறாமல் ஊறுகள் செய்வதையே கொள்கையாகக் கொண்ட இதயமற்ற இந்தத் திமுகவிற்கு, கொள்கை கோட்பாடுகளோடு மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும் அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலையும் குமைச்சலையும் கொட்டுவது ஒன்றும் புதிதில்லை தானே?

நிச்சயம்

மக்கள் சக்தியுடன் வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும் 'அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்' என்றும் வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர்' என்றும் தங்கள் மனத்தில் மண்டிக் கிடந்த வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள்தானே இவர்கள்? அன்றே இவர்கள் இப்படித்தான். இன்று மட்டும் மாறிவிடுவார்களா? தவெகவை மட்டும் எப்படிக் குறைகூறாமல் இருப்பார்கள்? யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய அடிப்படைக் கோட்பாட்டோடு, மதச்சார்பற்ற சமூக நீதி என்ற மகத்தான கொள்கையோடு பாதை வகுப்போம். 2026 சட்டசபைத் தேர்தலில் 1967, 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றி விளைவை மக்கள் சக்தியின் பேராதரவுடன் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Tamilan
செப் 14, 2025 21:22

அரசியல் அரசு என்பது நாடகம் சினிமா அல்ல ஆக்சன் போட


Tamilan
செப் 14, 2025 21:21

இவருடைய கதறல் யாருக்கும் கேட்கவில்லை என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூறுகிறார்கள்


Sivaram
செப் 14, 2025 21:20

சன் பிக்சர்ஸ் பிறகு ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தில் நடித்தால் நீ நம்ம ஆளு இல்லாவிட்டால்புதிய எதிரி அப்படித்தானே உடன்பிறப்பே வாழ்க உங்கள் சமூக நீதி


Kjp
செப் 14, 2025 20:52

உரலுக்கு ஒரு பக்கம் இடி என்று முன்பு திமுகவுக்கு இருந்தது. இப்போது திமுக மத்தளம் போல் ஆகிவிட்டது. விஜய் வந்த பிறகு இரண்டு பக்கமும் இடி. திகழுக்கு பொறுக்க முடியவில்லை. புலம்பி தள்ளுகிறார். தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் இருக்கிறது. திமுகவுக்கு இன்னும் எத்தனை இடி வரப்போகிறதோ தெரியவில்லை.


Palanisamy Sekar
செப் 14, 2025 20:27

ஸ்டாலினின் நிலைமை அந்தோ பரிதாபம் கதைதான். வர்றவன் போறவன் எல்லோரும் சகட்டுமேனிக்கு ஸ்டாலினை வறுத்தெடுக்குறாங்க. படிக்கும்போதே மனசு சந்தோஷத்துல ஜோரா ஜொலிக்குது. கனவுலகில் வாழுகின்ற ஸ்டாலினுக்கு 2026 தேர்தல் நிரந்தரமான ஓய்வை கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. கூட்டி கழிச்சு பார்த்தால் ஸ்டாலினுக்கு 40-45 சீட்டுகூட தேறாது போல. தேர்தல் முடிவுக்கு அப்புறமா ஏகப்பட்ட ஊழல் வழக்குகளை திமுகவில் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள் சந்திக்க நேரிடும். 2026 வெரிஹாட் தேர்தல் ஆண்டாக இருக்கும் என்பது நிச்சயம். அதிமுக ஜெயிச்சாலும் சரி அல்லது த வெ க கட்சியோடு கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தாலும் சரி நிம்மதி இழக்கப்போவது திமுகதான். திமுகவின் இறுதி யாத்திரை இந்த 2026ஆம் ஆண்டு


Rajkumar Ramamoorthy
செப் 14, 2025 22:00

அதிமுக + தா வே க கூட்டணி ஆட்சி அமைய வாழ்த்துக்கல்


Murali
செப் 14, 2025 20:24

ஆசை இருக்கலாம், ஆனால் வாய்ப்பு இல்லை ராஜா...


உண்மை கசக்கும்
செப் 14, 2025 20:18

சரி அதையெல்லாம் விட்டு விடுங்கள். உங்கள் சினிமா துறையில் நீங்கள் இது வரை வாங்கிய கறுப்பு பணம் எத்தனை கோடி? சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் முதல் உங்கள் சினிமா துறையில் உள்ள எல்லோரும் வாங்கிய , வாங்கும் கருப்பு பணம் எத்தனை ஆயிரம் கோடிகள் ? அதை சரி பண்ணுங்க ஆக்டர் சார்.


Pandianpillai Pandi
செப் 14, 2025 20:03

இன்று மாணவர்கள் எல்லாத்துறையிலும் வெற்றி வாகை சூடிட தி மு க அரசு முக்கியத்துவம் கொடுப்பதை இளைஞர்கள் புரிந்துகொண்டுள்ளனர். இந்த பயம் தான் உங்களை பதற கதற வைத்திருக்கிறது. வாங்க நீங்க இன்னும் பொது வெளியில் வந்து பேசணும் அப்பத்தான் நீங்க ஒரு டம்மி பீசுன்னு தெரிஞ்சுப்பாங்க. நீங்கள் சொல்லிக்கொள்கிற கொள்கை தலைவர்கள் பேச்சுக்களை நீங்கள் கேட்டதுண்டா ? அல்லது படித்தது உண்டா ? அவ்வாறு படித்திருந்தாலோ கேட்டிருந்தாலோ நிச்சயம் அண்ணன் திருமா வை போல் தி மு க கூட்டணியில் இருந்திருப்பீர்கள்.


திகழ் ஓவியன்
செப் 14, 2025 19:45

Oviya Vijay, திகழ் ஓவியன்...என பலப்பல பெயரில் அமைதிமார்க்கம் இங்கு வந்தாலும், நீங்க ஒரு 200ரூபாய் திராவிட ஊபி என்பது எல்லோருக்கும் தெரியும்...


திகழ்ஓவியன்
செப் 14, 2025 20:42

ஹா ஹா கோழைகள் கருத்தை எதிர் கொள்ள தயக்கம் உடனே இப்படி என் பேரில்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 19:14

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தவரை ஜோசப்பு விஜய் பின்னால் இருந்தார் .... திமுகவின் எதிரியாக பாஜக தோற்றமளித்தது .... ஆனால் இப்போ >>>>


புதிய வீடியோ