மேலும் செய்திகள்
கார் மோதி முதியவர் பலி
29-Oct-2026
அரக்கோணம்: அரக்கோணத்தில், இரண்டு லட்சத்து, 74,000 ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையை தடுக்கும் வகையில், கலால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (நவ.,16) அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் பகுதியில், சந்தேகப்படும் படி நின்றிருந்த, இரு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கோவையை சேர்ந்த சந்துரு, 24, மனோஜ் குமார், 25, என்பதும், புனேவில் இருந்து, ரயில் மூலம், போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை கடத்தி வந்து, அரக்கோணத்தில் விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது, இவர்களிடமிருந்து, 2 லட்சத்து, 74,000 ரூபாய் மதிப்பிலான, 600 வலி நிவாரணி மாத்திரைகளை, போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
29-Oct-2026