உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிக்கு தொல்லை பெயின்டருக்கு ‘கம்பி’

சிறுமிக்கு தொல்லை பெயின்டருக்கு ‘கம்பி’

வேலுார்: வேலுாரில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயின்டர் அப்பு பாலாஜி, 22, என்பவரை ‘சிங்கப்பெண்’ போலீசார் கைது செய்தனர். வேலுார் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு பாலாஜி; பெயின்டர். இவர், நேற்று (நவ.,4) மாலை, வேலுார் மாவட்டத்தில், ஒரு பகுதியை சேர்ந்த, இரண்டாம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். சிறுமியின் பெற்றோர், சிங்கப்பெண் அதிரடி படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சிங்கப்பெண் அதிரடிப்படை சப்- – இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார், சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அதன்பின், சிறுமியை வேலுார் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பாலியல் தொல்லை அளித்த அப்பு பாலாஜியை பிடித்து, வேலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போச்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு, அப்பு பாலாஜி இன்று (நவ.,5) கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

krishnaraj
நவ 06, 2026 07:19

Atleast 50% Cases are False& Vestedly Cookedup by CaseNewsVotePower Hungry SelfSaint MAFIAs for Vested FalseComplaintGangs, All Due to their NonPunishments by Any CourtJudges


Mani . V
நவ 06, 2026 05:36

வீரமணி மாதிரி பணக்காரனாக இருந்தால் நூற்றுக்கணக்கில் தூக்கி இருந்தாலும் கை வைக்க மாட்டார்கள்.


புதிய வீடியோ