உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி கோயில்: வர்த்தக பயன்பாட்டிற்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

பழநி கோயில்: வர்த்தக பயன்பாட்டிற்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: பழநி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என்று ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.பழநியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற போவதாக ஜன. 5ல் அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதை கண்காணிக்க ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் 1000க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், '' பழநி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். சோதனை சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும்'' என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜன 10, 2024 01:02

ஆட்சியில் உள்ளவர்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டிய லஞ்சத்தை பெற்று வியாபாரிகளை ஆக்கிரமிப்பு செய்யவிடுவார்கள். இப்பொழுது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவைகள் இடிக்கப்படும் வேளையில் அங்கேயே நின்று கொன்று வேடிக்கை பார்ப்பார்கள். அந்த வியாபாரிகளின் அழுகை, குமுறல் லஞ்சம் வாங்கியவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும்.


அப்புசாமி
ஜன 09, 2024 22:58

கோவில் உண்டியல்களையும் எடுத்துருங்க. தரிசனத்துக்கு காசு வசூலிக்கக் கூடாது. எல்லாமே யாபாரமாப் போச்சு.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 09, 2024 21:41

அறநிலையத்துறை கோவில்களை வைத்து சம்பாதிக்கலாமா ???? அது வணிக ரீதியான பயன்பாடு இல்லையா ????


Siva
ஜன 09, 2024 20:50

பலரின் பலநாள் எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் முருகா.


Seshan Thirumaliruncholai
ஜன 09, 2024 19:16

நல்ல தீர்ப்பு. அரசின் நோக்கம் முறியடிக்கப்பட்டது. அதுபோல் திருக்கோயில் உண்டியல் பணமும் ஆலயங்களின் மேம்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தவேண்டும். அறங்காவலர் குழு அமைக்கும்வரை உண்டியல் பணம் வங்கிகளில் நிரந்தர வைப்பாய் இருத்தல் வேண்டும். அறநிலையத்துறை உண்டியல் தொகை என்ணும் போது சாட்சியாய் மட்டும் மேற்பார்வை செய்யவேண்டும். இது அரசின் வருமானம் இல்லை என்பதனை உறுதிசெய்தல் முக்கியம்.


GMM
ஜன 09, 2024 18:31

கோவில் வழிபடும் இடம். வர்த்தக இடம் அல்ல. நீதிமன்ற தீர்ப்பு வரவேற்பு பெறும். ஆலயம் உள் அரசியல் இருப்பதால், உத்தரவு நிரந்தரமாக அமுல் படுத்த வேண்டும். பல கோவில்களுக்கு விரிவு படுத்த வேண்டும். வழிபட, கோவில் நடை திறக்கும் நேரத்தில் கோவில் உள் அனுமதிக்க பட்ட கடைகள் மூட வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை