உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடிவேலு காமெடி போல செயல்படும் பழனிசாமி

வடிவேலு காமெடி போல செயல்படும் பழனிசாமி

நாட்டில் மதசார்பின்மை என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பா.ஜ., ஆளும் மாநிலங்கள் தவிர, பிற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில், மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அமைச்சரவையில் பா.ஜ., இடம் பெறும் என அமித் ஷா கூறுகிறார். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார். திரைப்படங்களில் நடிகர் வடிவேலு காமெடி போல, தன்னைத்தானே தலைவர், தலைவர் என்று பழனிசாமி கூறிக் கொள்கிறார். அவருடன் கூட்டணி வைக்க எந்த கட்சிக்கும் விருப்பமில்லை. தி.மு.க., கூட்டணியில் பிளவு ஏற்படாதா என காத்திருக்கும் பழனிசாமி எண்ணம் பொய்த்துத்தான் போகும். - முத்தரசன், மாநில செயலர், இந்திய கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
ஜூலை 22, 2025 11:58

இவர்களும் இவர்கள் கூட்டணியில் உள்ளோர்களும் பண்ணும் காமெடியை விடவா? இவர்கள் பணம் வாங்கின விஷயே ஒரு காமெடிதான்-என்ன செய்வது? முறையான முழுமையான படிப்பு இருந்தால் இவைகளைக் களையலாம்


veeramani
ஜூலை 22, 2025 09:00

உண்டியல் குலுக்கிகளின் லீடர் பிதற்றுகிறார். உங்களுக்கு தைரியம் இருந்தால் அனைத்து எலெக்ஷன்களிலும் தனித்து நின்று உங்களது வாக்கு வங்கியை நிரூபணம் செய்யுங்கள். எந்த தலைவரையும் பரிகசித்து நல்லதுஅல்ல .மக்கள் வருகின்ற எலெக்ஷனில் புரிய வைப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை