உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலச்சூழலுக்கு ஏற்ப கள்ளுக்கு அனுமதி பழனிசாமி அறிவிப்பு

காலச்சூழலுக்கு ஏற்ப கள்ளுக்கு அனுமதி பழனிசாமி அறிவிப்பு

பழனிசாமி அறிவிப்புபொள்ளாச்சி: ''காலச் சூழலுக்கு ஏற்ப 'கள்' பிரச்னையில் முடிவு எடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார். பொள்ளாச்சியில் விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: அளவுக்கு மீறி கடன் வாங்கியதால் தான், அதிக வரி சுமையை மக்கள் மீது சுமத்தி உள்ளது தி.மு.க., அரசு. ஆனால், அரசுக்கு தேவையான நிதியை உருவாக்க எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஆயக்கட்டு பகுதிகளில் மனைகளான நிலங்களை கணக்கெடுத்து, அதற்கு மாற்றாக விளை நிலங்களை சேர்க்க ஆய்வு மேற்கொள்ளப்படும். கள்ளுக்கான தடை நீக்கம் குறித்து கள் ஒருங்கிணைப்பாளர் பல முறை பேசியுள்ளார். ஒரு பிரச்னை எழும்போது, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பும். காலச் சூழலுக்கு ஏற்ப 'கள்' பிரச்னையில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.

விவசாயி கேள்வியால் சலசலப்பு

கலந்தாய்வு கூட்டத்தில் விவசாயி பாலசுப்ரமணியம் பேசும்போது, ''தமிழகத்தில் கள் இறக்க தடையால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில், இதற்கான முன் முயற்சி எடுக்கப்பட்டது. ''அதையொட்டி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இதற்கான நடவடிக்கை எடுத்து இருந்தால் பயனாக இருந்திருக்கும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் கள் இறக்கி, கேரளாவில் விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்க வேண்டும்,'' என, ஆவேசமாக பேசினார். அப்போது குறுக்கிட்ட பழனிசாமி, ''அனைவரது எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும். நீரா பானம், கள் மற்றும் விவசாயிகள் பிரச்னைக்கு ஆட்சி அமைந்ததும் தீர்வு காணப்படும். மற்றவர்களைப் போல, பொய் வாக்குறுதிகளை அளிக்க மாட்டோம்; சொன்னால் அதை செய்வோம்,'' எனக்கூறி சமாதானப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை