உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையன் கெடுவை அடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்த பழனிசாமி

செங்கோட்டையன் கெடுவை அடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்த பழனிசாமி

தேனி: 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி நேற்று தேனி பழனிசெட்டி பட்டியில் தங்கியிருந்த ஹோட்டலில் விவசாயிகள், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க பொதுச்செயலர் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து பேட்டி அளித்தார். அந்த நேரத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோருடன் பே சிக் கொண்டிருந்தார். பின்னர், அ.தி.மு.க., தரப்பில், விவசாயி களுடன் நடக்க இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு தேசிய விவசாயிகள் சங்கம், ஆண்டிபட்டி மலர் விவசாயிகள் சங்கம், தபால்துறை சிறுசேமிப்பு முகவர்கள் மகளிர் சங்கம், சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு, 18ம் கால்வாய் விவசாயிகள் சங்கம். தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்கம், கர்னல் ஜான் பென்னிகுவிக் மலை மாடுகள் வளர்ப்போர் சங்கம் உள்ளிட்ட 15 சங்க நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகளை பழனிசாமி கேட்டறிந் தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி