உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்துள்ளார் பழனிசாமி: கனிமொழி

பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்துள்ளார் பழனிசாமி: கனிமொழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அ.தி.மு.க., வுக்கும், தமிழக மக்களுக்கும், பழனிசாமி துரோகம் செய்துள்ளார்' என, தி.மு.க., துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி., தெரிவித்தார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: இனி ஒரு போதும், பா.ஜ., வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என, தெரிவித்த பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அமர்ந்திருந்த மேடையில், அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை அறிவித்துள்ளார். பா.ஜ.,வின் பல்வேறு மசோதாக்களை, திட்டங்களை எதிர்த்து கொண்டிருப்பதாக, சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, அமித் ஷா அமர்ந்திருந்த மேடையில் மவுனமாக அமர்ந்து, பா.ஜ.,வுடன் கூட்டணியை ஏற்றுக் கொண்டார். அ.தி.மு.க., - பா.ஜ., வினர் பிரிந்து விட்டாலும், தொடர்பில் தான் இருக்கின்றனர். மீண்டும் அவர்களின் கூட்டணி உருவாகும் என, முதல்வர் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கூறியது உண்மை என்பது நிருபணமாகி உள்ளது. காசி தமிழ் சங்கம் நடத்தியது மிகப் பெரிய தொண்டு என, பா.ஜ.,வினர் சொல்கின்றனர். தமிழ் காசிக்கு செய்யக் கூடிய நன்மையாக, நாம் எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதனால் தமிழ் எப்படி வளர்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. சமஸ்கிருதம் மொழிக்கு 2,400 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால், தமிழை வளர்க்கிறோம் என, சொல்கிற பா.ஜ.,வினர், தமிழுக்கு 100 கோடி ரூபாய் கூட செலவு செய்யவில்லை. இப்படி பாரபட்சமாக மத்திய அரசின் ஆட்சி நடக்கிறது.கேந்திர வித்யாலயா பள்ளிகளில், தமிழ் சொல்லிக் கொடுக்க, நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லை. இப்படி ஒரு ஆட்சியில், தமிழ் வளர்ச்சிக்கு அவர்களால் என்ன செய்ய முடியும். பிரதமர் எங்கேயாவது செல்லும்போது, திருக்குறளை சொல்வதும், மத்திய நிதி அமைச்சர், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதையும், தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஹிந்தியை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாரே தவிர, தமிழுக்காக எதுவும் அவர் செய்யவில்லை. சமீபத்தில் சிறுபான்மை மக்களுடன் நிற்போம் என, ஆணித்தரமாக பழனிசாமி பேசினார். ஆனால், யார் அந்த மசோதாவை நிறைவேற்றினரோ, அவர்களின் மேடையில் ஏன் அமர்ந்தார். தன் கட்சித் தலைவர்களான, அண்ணாதுரை, ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சித்த, ஒரு தலைவருடன் மேடையில் ஏன் பழனிசாமி அமர்ந்தார். யாரோ ஒருவர் கூட்டணி அறிவிக்க, பழனிசாமி கேட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. யார் தலைமையில் கூட்டணி அமைகிறதோ, அவர்கள் தான் கூட்டணியை அறிவிக்க வேண்டும். ஆனால், அந்த மேடையில் பேசுவதற்கு கூட, பழனிசாமிக்கு உரிமை இல்லாத நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்படுகிறது. அ.தி.மு.க., தலைவர்களை எல்லாம் இழிவாக பேசக்கூடிய, பா.ஜ., தலைவர்களை, தன் வீட்டிற்கு அழைத்து, விருந்து அளிக்க வேண்டிய நிலைக்கு பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். இது கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் செய்துள்ள மிகப்பெரிய துரோகம். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

R.MURALIKRISHNAN
ஏப் 13, 2025 14:15

எங்க நீங்களும் உங்கண்ணனும் பத்து திருக்குறளை துண்டு சீட்டு இல்லாமல் சொல்லுங்க பார்போம்.மொழியை வைத்து ஈன பிழைப்பு நடத்துவது திமுக.


நிக்கோல்தாம்சன்
ஏப் 13, 2025 13:10

நீ சோற்றை பொன்முடி போல சாப்பிடுவாயா இல்லை ராசா போலவா ?ஒட்டுமொத்தத்தில் நீ சாப்பிடிவுவது சோறே இல்லைதானே


karupanasamy
ஏப் 13, 2025 06:38

நேர்மையை எதிர்பார்க்கமுடியாது.


Murthy
ஏப் 12, 2025 21:19

கருணாநிதி பிஜேபி காங்கிரஸ் என்று ஆரியர்களுடன் கூட்டணி வைத்து தமிழர்களுக்கு துரோகம் செய்ததுபோல் என்று சொல்வதுதான் பொருந்தும் .


Bala
ஏப் 12, 2025 20:29

கூடா நட்பு கேடாய் முடியும்னு சொல்லிட்டு நீங்க காங்கிரஸுடன் கூட்டு வைத்து தமிழர்களுக்கு துரோகம் இழைக்க வில்லையா? அதைவிட இது எவ்வளவோ மேல். உங்கள் பெண்கள் மீதான சாராய தாக்குதல் ஆட்சியை விட எடப்பாடி ஆட்சி எவ்வளவோ மேல். மேலும் வரும் 2026 இல் எடப்பாடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிஆட்சி மகத்தான ஒரு கூட்டணி ஆட்சிதான். வெற்றியின் பாதையிலே அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியை எதிர்நோக்கி தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது


Saravanan
ஏப் 12, 2025 20:06

உங்கப்பா கூடத்தான் காங்கிரஸ் கூட கூட்டு சாம்பார் எல்லாம் இல்லையின்னார் அப்புறம் எதுக்கு சேர்ந்தார்? அது அவங்க கட்சி விஷயம் உங்களுக்கு ஏன் பதட்டம் ஒரு வேலை திகார் கண்ணுக்கு தெரியுதா?


Raja
ஏப் 12, 2025 17:53

இந்த பெண் எதற்கு கதறுகிறார்? அண்ணனை ஒழுங்கா ஆட்சி செய்ய சொல்லும்மா..


P.M.E.Raj
ஏப் 12, 2025 17:20

பயத்தில் என்ன பேசுவதுஎன்றே தெரியவில்லை இவருக்கு. திமுக கொண்டிருக்கும் கூட்டணியைப் பற்றி சொன்னால் அது முரண்பாடான கூட்டணி. 2026 தேர்தல் என்பது சட்டம் ஒழுங்கு சீர்குலைத்த திமுக ஹிந்து விரோத ஊழல் கூட்டணிக்கும், திமுக கும்பலிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற பாஜக கூட்டணிக்கும் நடைபெறவுள்ள தர்மயுத்தம். திமுக ஒழிக்கப்படவேண்டிய கட்சி.


panneer selvam
ஏப் 12, 2025 17:03

Kanimozhi madame , why you bother about your rival party AIADMK ? Are you a member of AIADMK ?? It looks you are panicky


சங்கி
ஏப் 12, 2025 16:14

நீங்கள் கூட்டணி வைத்தீர்களே அதற்க்கு பெயர் என்ன கனியக்கா. வாயை மூடிக்கிட்டுரு இல்லை அமைச்சர் இடம் விட்டு விடுவோம். அவர் என்ன பண்ணுவார் என்று தெரியுமில்ல?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை